As Chandrababu Naidu's TDP Insists On Special Status, "Us Too" Says Team Nitish Kumar | நாயுடு போன்று பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோருவாரா நிதீஷ்| Dinamalar

நாயுடு போன்று பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோருவாரா நிதீஷ்

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (35)
Advertisement
Chandrababu Naidu,Nitish Kumar,Bihar Special status, ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்,ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தள கட்சி, நிதீஷ்குமார் மவுனம், பீஹார் சிறப்பு அந்தஸ்து, 
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu, Bihar Chief Minister Nitish Kumar, Andhra Pradesh special status, Prime Minister Modi, Telugu Desam Party, United Janata Dal, Nitish Kumar silence,


புதுடில்லி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு போன்று பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர கோரி பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுப்பாரா? என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்ப துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ. தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைத்தது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து, மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை வலியுறுத்தி வந்தார். நேற்று முன்தினம் திடீரென தெலுங்கு தேசம் கட்சி பா,.ஜ. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இரு மத்திய அமைச்சர்களும் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் மத்திய அரசில் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சியும் பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோர வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நிதீஷ் மவுனம் காப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி கூறியது, எங்களது மாநிலமான பீஹார் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. .மத்திய அரசிடம் சிறப்பு நிதி ஓதுக்கீடு பெற வேண்டியது அவசியம் என்றார். தவிர பீஹாரின் பிரதான எதிர்க்கட்சியான ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி தே.ஜ. கூட்டணியில் உள்ளதால் அந்த கட்சியும் தனது ஆதரவை தர வேண்டும் என்றார்.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளகட்சி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பா.ஜ. கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறியது சரியான முடிவு. இந்த விஷயத்தில் நிதீஷ்குமார் மவுனம் காக்கிறார். எங்கள் கூட்டணியை முறித்துவிட்டு பா.ஜ.விடம் சேர்ந்துள்ள நிதீஷ் இப்போதாவது ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடுவுிடம் பார்த்து பாடம் கற்று கொண்டு பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும் அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறி சந்திரபாபு நாயுடுவை பின்பற்ற வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மார்-201819:53:43 IST Report Abuse
Rockie-பாலியல் ஜனதா கட்சி கடந்த பீஹார் சட்டமன்றத்தேர்தலில் 1 .25 லட்சம் கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படுமென்று அறிவித்தாரே மோடிஜி, அது வெறும் அறிவிப்பு மட்டும்தானா? வாயிலேயே வட சுடுறது இதுதானா? அரசியல் பதவிக்காக இவ்வளவு கேவலமா பொய் சொல்லும் நபர்தான் நம்ம பிரதமர்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
09-மார்-201817:03:52 IST Report Abuse
K.Sugavanam நிதீஷ் குமார் எங்கே கொரலு குடுப்பது.. வீழ்ந்து கிடப்பதே பிஜேபி யின் காலடியில்.. அடிமைகளுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்படவில்லை..எனவே அனைத்தையும் மூடிக்கொண்டு துதி பாடி வேண்டுமானால் நிதிக்கு இறைஞ்சலாம்.
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
09-மார்-201816:00:42 IST Report Abuse
Mano மோடி போன்ற லாயக்கற்றவர்கள் நாட்டை ஆள்வது வெட்கக்கேடு
Rate this:
Share this comment
Cancel
Suresh Gobinathan - Maraimalai Nagar,இந்தியா
09-மார்-201814:28:46 IST Report Abuse
Suresh Gobinathan பாஜகவின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு கண்டிப்பாக நிதீஷ் விலை போவார். அவரும் கேட்பார். இது ஆந்திர சந்திரபாபு நாயுடுவை கையாள போடப்பட்ட பிஜேபியின் துல்லியமான திட்டம். நாடா நடக்குது இங்க? சுடுகாடு தான் பிஜேபி ஆட்சில.
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Subhramani - vijayawada,இந்தியா
09-மார்-201814:08:13 IST Report Abuse
Palanisamy Subhramani ஆல் election stunt, why he sailed so far ,now why detaching,always blaming Congress is not correct Telangana is aspiration of people for the last 50 yrs.If simply Specail status helps go through the Papers of 2014 Naidu said 4 lks crore should be considered.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
09-மார்-201813:59:12 IST Report Abuse
Narayan இரண்டாவது ஆப்ஷன் எதுவும் இல்லை என்பதை விட, மோடி தவிர வேறு நல்ல தேசிய தலைவரே இல்லை என்பதை விட, பாஜக தவிர இரண்டாவது இந்திய கட்சியே இல்லை என்று சொல்ல வேண்டிய நிலையில் மற்ற எதிர் கட்சிகள் உள்ளன... இத்தாலி, வாடிகன், அமெரிக்க ஐரோப்பிய என் ஜீ ஒக்கள், சவுதி, பாக், சீனா, பங்களாதேஷ், இலங்கை, என பல நாட்டின் கட்சிகள் உள்ளன. ஆனால் இந்திய தேசிய கட்சி பாஜக கட்சி மட்டுமே உள்ளது.
Rate this:
Share this comment
yila - Nellai,இந்தியா
09-மார்-201816:03:34 IST Report Abuse
yilaபாசிச கட்சி......
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
09-மார்-201813:58:39 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan சிறப்பு நிதி கேட்டு வீரப்பா வந்தால் ஆட்சி போய்விடும். அப்புறம் ஊழல் வழக்குகள் தொடர்ந்து வரும். நிதீஷுக்கு தெரியாத என்ன?
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
09-மார்-201813:55:53 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan தேர்தல் பிரச்சாரத்தில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மோடி கூறினார். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை மோடிக்கு உள்ளது. வாயால் வடை சுட்டு ரொம்ப காலம் ஆட்சி செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-மார்-201813:22:18 IST Report Abuse
Nallavan Nallavan பீகாரும் கேட்டால் (என்ன கொடுத்தாலும் விளங்கப்போவதில்லை பீகார்) இறையாண்மையைப் பாதிக்கலாம் .....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201812:25:41 IST Report Abuse
Pasupathi Subbian இதென்ன புதிய போட்டா போட்டி, இந்திய சுதந்திரம் அடைந்தபொழுது இருந்த மாநிலங்களவை பீகாரும் ஒன்று, அதில் ஆட்சி செய்ய ஏற்கனவே கட்டமைப்புகள் முழுவதும் உள்ளன. என்ன பிற்காலத்தில் ஆட்சியர்கள் சரிவர ஆட்சி செய்யாத காரணத்தினால் , மாநிலம் நலிந்துபோய்விட்டது. ஆனால் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை , அன்றைய காங்கிரஸ் ஆட்சி , ஹைதராபாதி முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு இணங்க , ஏற்கனவே தலைநகரமாக விளங்கும், ஹைதராபாத்தை உட்படுத்தி, நல்ல செழிப்பமான மாவட்டங்களை உள்ளடக்கி தெலுங்கானா என்ற மாநிலமாகவும். தலைநகரம் இல்லாத ஒரு மாநிலமாக, நீர்ப்பாசன வசதிகள் இல்லாத மாநிலங்கள், தொழில்சாலை இல்லாத வறண்ட பிரதேசம், தரிசல் பூமி கொண்ட இடங்களை, சீமாந்திரா மாநிலம் என்று இரண்டு மாநிலங்களை பிரித்து, தெலுங்கானா மக்களின் ஓட்டை பெற முயன்றது, அப்போது எழுந்த எதிர்ப்புகளை சமாளிக்க , சீமாந்திரா மாநிலந்த்துக்கு, சிறப்பு சலுகைகள் , கட்டமைப்புக்கு மத்திய உதவிகள் அள்ளி தருவதாக உறுதிமொழி கொடுத்தது. ஆனால் அதன் பின் மத்திய அரசை ஆள பி ஜெ பி வந்தது, உடனே , தெலுங்கானா மாநில ராவ், பிஹார் மாநில அரசு போன்றவர்கள் , எங்களுக்கும் சிறப்பும் அந்தஸ்த்து கொடுக்கவேண்டும் , சலுகைகள் கொடுக்கவேண்டும் என்று போராட ஆரம்பித்துவிட்டனர். வேறு வழி இன்றி பி ஜெ பி அரசு , சீமாந்திராவுக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட சிறப்பு சலுகைகள். அந்தஸ்த்தை , கொடுக்க மறுக்கவேண்டிய நிலை. இருந்தாலும் சீமந்திராவுக்கு பற்பல வழிகளில், பி ஜெ பி அரசு உதவிகள். சலுகைகளை கொடுத்துள்ளது. இருந்தும் திரு நாயுடு அவர்கள் , சிறப்பு அந்தஸ்த்தை வாபஸ் பெறக்கூடாது என்று போர்புரிகிறார், இது ஒரு வகையில் மத்திய அரசை பலவந்தப்படுத்தும் செயல். அவர் ஒன்றும் தனக்கு அதுவேண்டும் இதுவேண்டும், என்று திரு சந்திரசேகர ராவ் அவர்களை போல கேட்டுப்பெறவில்லை. தனது மாநிலம் சிறப்பாகவேண்டும், செழிக்கவேண்டும், கட்டமைப்புகள் பற்பல உண்டாக்கவேண்டும், சிறந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் கேட்பது தவறே இல்லை. பி ஜெ பிக்கு இது ஒரு இருதலை கொல்லி எறும்பு போல நிலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை