வனப்பகுதிக்கு தீ வைத்த 6 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதிக்கு தீ வைத்த 6 பேர் கைது

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு அருகே, வனப்பகுதிக்கு தீ வைத்த, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், கோட்டையூர் வனப்பகுதியில், பேர்ணாம்பட்டு வனக்காவலர்கள் நேற்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த, ௨௩ - ௩௪ வயதுடைய, ஆறு பேரை பிடித்து விசாரித்தனர்.இவர்கள் வனப்பகுதியில் தீ வைத்து, அதன் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல், வெளியேறும் மான், முயல், போன்றவற்றை பிடித்து, இறைச்சிக்காக விற்பனை செய்வோர் என்பது தெரியவந்தது.அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நான்கு நாட்டு துப்பாக்கி, மூன்று பைக்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதான ஆறு பேரும், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை