கஞ்சா கடத்தல் தொழிலாளிக்கு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

 கஞ்சா கடத்தல் தொழிலாளிக்கு சிறை

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: காரில் கஞ்சா கடத்தியவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பாம்மாள்புரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ்,30; கோவையில் தங்கியிருந்து, நகை பட்டறையில் வேலை செய்தார்.இவர் கஞ்சா கடத்தி விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார், மோகன்தாசை கண்காணித்து வந்தனர். 2015, ஏப்., 9ல், கோவை அருகே காரில் வந்த மோகன்தாசை நிறுத்தி சோதனையிட்ட போது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, 21 கிலோ கஞ்சாவை, விற்பனைக்கு கடத்தி வந்தது தெரிந்தது.மோகன்தாசை கைது செய்து, கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி குணசேகரன், குற்றம் சாட்டப்பட்ட மோகன்தாசுக்கு, 10 ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை