நம் பெருமை!| Dinamalar

நம் பெருமை!

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே, நம் பெருமை. மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்; விரும்பியபடி நடந்து கொள்ளலாம் என்பதே, இதன் அடிப்படை. ஆனால், தற்போது இவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மக்களை துாண்டி, அதைப் பயன்படுத்தும் அரசியலே நடந்து வருகிறது.
ராகுல், தலைவர், காங்.,
இயக்கமாக மாற்றுவோம்!
பெண் குழந்தைகளுக்கு எதிராக, காலங்காலமாக குடும்பங்களில் எதிர்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளை காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம். அதை செயல்படுத்தும் வகையில், இந்த விஷயத்தை, மிகப்பெரிய இயக்கமாக மாற்ற வரும்படி, ஒவ்வொரு மாமியாருக்கும், மாநில அரசுகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நரேந்திர மோடி, பிரதமர்
வெறுப்பு ஏற்பட்டுள்ளது!
பா.ஜ.,வின் வெற்றிகளால், பார்லிமென்ட், ஜனநாயக நடைமுறை, மக்களின் தீர்ப்பு மீது, காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி மோசடிகள் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், தங்கள் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதற்காக, பார்லி.,யை செயல்பட விடாமல் முடக்குகின்றனர்.
ஆனந்த் குமார்,மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை