'டில்லி ஐகோர்ட்டை அணுகுங்களேன்' கார்த்திக்கு சுப்ரீம் கோர்ட் ஆலோசனை| Dinamalar

'டில்லி ஐகோர்ட்டை அணுகுங்களேன்' கார்த்திக்கு சுப்ரீம் கோர்ட் ஆலோசனை

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: அமலாக்கத் துறை அனுப்பிய, 'சம்மனை' எதிர்த்து, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார், 'டிவி' நிறுவனம், வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு அனுமதி அளித்ததில் மோசடி நடந்ததாகவும், அதற்கு, சிதம்பரத்தின் மகன், கார்த்தி உதவியதாகவும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கில், கார்த்தியை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். மோசடி குறித்து, மத்திய அமலாக்க இயக்குனரகம், தனியாக வழக்கு பதிவு செய்தது. அந்த விசாரணைக்கு ஆஜராகும்படி, கார்த்திக்கு, 'சம்மன்' அனுப்பியது.இதை எதிர்த்து, கார்த்தி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க மறுத்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கோரிக்கை குறித்து, டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, அமர்வு கூறியது. உடனடியாக, இந்த மனு மீது விசாரணை நடத்தவும், அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக, கார்த்தி சார்பில் கூறப்பட்டது. அதை, உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்றது.அதன்படி, இந்த மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரிக்கப்பட உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை