அனுமன் சிலை உ.பி.,யில் சேதம்| Dinamalar

அனுமன் சிலை உ.பி.,யில் சேதம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பலியா: உ.பி.,யில், அனுமன் சிலையை சேதப்படுத்திய வர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், ரஷ்யாவைச் சேர்ந்த, கம்யூனிஸ்ட் தலைவர், மறைந்த, லெனின் சிலையை, சமீபத்தில் சிலர் சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம், உ.பி., போன்ற மாநிலங்களிலும், தலைவர்கள் சிலை உடைப்பு சம்பவங்கள் நடந்தன. இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும், உ.பி.,யின், பாலியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், அனுமன் சிலையை, விஷமிகள் சிலர், நேற்று சேதப்படுத்தினர்.இது பற்றி போலீசார் கூறுகையில், 'அனுமன் சிலையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகிறோம். அவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.இது போல், கேரளாவில், தேசப்பிதா மஹாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. கேரள போலீசார், இது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை