ராணுவ வீரர் தற்கொலை| Dinamalar

ராணுவ வீரர் தற்கொலை

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர், வீரேந்திர சின்ஹா, நேற்று முன்தினம், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த, நாயக் சங்கர் சிங், 36, என்ற ராணுவ வீரர், குப்வாரா மாவட்டத்தின், வார்னோவா பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்தார். அவர், நேற்று துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இரு நாட்களில், அடுத்தடுத்து இரு ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துஉள்ளது, ராணுவ வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை