துபாயில் தாவூத் கூட்டாளி கைது | Dinamalar

துபாயில் தாவூத் கூட்டாளி கைது

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன், தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி, பரூக் தக்லா, துபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்டு, நேற்று, டில்லி அழைத்து வரப்பட்டான்.மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், ௧௯௯௩ல், ௧௨ இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 257 பேர் உயிரிழந்தனர்; 713 பேர் காயமடைந்தனர்; பல கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் சேதமடைந்தன. இந்த வழக்கில் ஏற்கனவே, பயங்கரவாதி யாகூப் மேமன், பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் உள்ளிட்ட, 100 பேருக்கு, 2007-ல் தண்டனை விதிக்கப்பட்டது. யாகூப் மேமன் துாக்கிலிடப்பட்டான். சஞ்சய் தத்துக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தலைமறைவுஇந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட, முஸ்தபா தோசா, அபு சலீம், கரீமுல்லா கான், பிரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்ச்சன்ட் ஆகியோர் மீதான வழக்குகள், தனியாக விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டு விட்டது.இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தலைமறைவு குற்றவாளிகளாக, மும்பை தடா நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்நிலையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான, தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி, பரூக் தக்லா என்ற, முகமது மஸ்தக் மியா, ௫௪, கைது செய்யப்பட்டு உள்ளான். ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாயில் கைது செய்யப்பட்ட தக்லா, நேற்று காலை, டில்லி அழைத்து வரப்பட்டான்.ஆயுத பயிற்சிமும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், பயங்கரவாதிகளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததாக, இவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, முக்கிய குற்றவாளி யாக சேர்க்கப்பட்டான். மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு பின், துபாய் தப்பிச் சென்ற தக்லா, அங்கிருந்து பாகிஸ்தான் சென்று, ஆயுதப் பயிற்சி பெற்றதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.'தக்லா சிக்கியதை அடுத்து, தாவூத் இப்ராஹிமும், விரைவில் கைது செய்யப்படுவான்' என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. தாவூதை சர்வதேச தீவிரவாதி என, அமெரிக்கா அறிவித்த பின், அவனுக்கு, ஐ.நா.,வும் தடை விதித்துள்ளது.இதற்கிடையில், இந்தியா திரும்பி சரணடைய, தாவூத் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை