விமான பாதுகாப்பு அறிவிப்பு உள்ளூர் மொழிக்கு, 'நோ'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விமான பாதுகாப்பு அறிவிப்பு உள்ளூர் மொழிக்கு, 'நோ'

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: 'விமானங்களில், பயணியருக்கான பாதுகாப்பு குறிப்புகளை, உள்ளூர் மொழியில் அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை' என, விமான போக்கு வரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.லோக்சபாவில் இது தொடர்பாக, விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், ஜெயந்த் சின்ஹா கூறியதாவது:விமானம் புறப்படுவதற்கு முன், 'சீட் பெல்ட்' அணிவது, அவசர வழி, பிராணவாயு முகமூடி, உயிர் காக்கும் சாதனங்கள் ஆகியவை பற்றி, விமான பணிப்பெண்கள், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.இந்த குறிப்புகளை, உள்ளூர் மொழிகளில் தெரிவிக்கும் திட்டம் உண்டா? என, உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உள்ளூர் மொழிகளில் பாதுகாப்பு அறிவிப்பு வெளியிடும் திட்டம் எதுவும், தற்போது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-மார்-201816:18:18 IST Report Abuse
தமிழ்வேல் புரியாத மொழிகளில் பாதுகாப்பு சம்பந்தமானதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் பயணிப்பதில் யாருக்குமே லாபமில்லை. குறைந்த பட்சமாக விமானத்தில் அமைக்கப் பட்டுள்ள ஸ்க்ரீன்களிலாவது அந்தந்த மொழிகளில் எழுத்துக்களை ஓடவிடலாமே.. அதுபோல சீட்டின் முன்னால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அட்டைகள், அந்தந்த மொழிகளிலும் இருக்கலாம். அல்லது அவரவர் போர்டிங் கார்டுகளில் பிரிண்ட் ஆகி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை