'சிறுபான்மையினரை காக்க ஆணையத்திற்கு அதிகாரம்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சிறுபான்மையினரை காக்க ஆணையத்திற்கு அதிகாரம்'

Added : மார் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: 'சிறுபான்மையினருக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போது, அதை எதிர்த்து, தேசிய சிறுபான்மையினர் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள், பயனற்றதாக உள்ளன; எனவே, சிறுபான்மையினர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்' என, பார்லி., நிலைக் குழு தெரிவித்துள்ளது.சமூக நீதி மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கான, பார்லி., நிலைக் குழுவின், 53வது அறிக்கை, லோக்சபாவில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:சிறுபான்மையினருக்கு எதிராக, நாட்டின் பல இடங்களிலும் அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அதை எதிர்த்துப் போராடி, அவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதில்லை. அது ஏன் என, சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்திடமும் கேள்வி எழுப்பினோம்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதைப் போலவே, தேசிய சிறுபான்மை ஆணையத்திற்கும், தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அப்படி வழங்கப்பட்டால் மட்டுமே, ஆணையம், தன் கடமையை சிறப்பாக செய்ய முடியும்.இது தொடர்பாக, 2013ம் ஆண்டிலேயே, மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது, இன்றும் கிடப்பில் உள்ளது.தேசிய சிறுபான்மை ஆணையத்திற்கு தன்னாட்சி வழங்குவது தொடர்பாக, அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201814:48:59 IST Report Abuse
Pasupathi Subbian சிறுபான்மை மக்கள் என்பவர்கள் யார்?
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-மார்-201807:46:53 IST Report Abuse
கதிரழகன், SSLC மொதல்ல தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம், தேசியக்கொடி, வந்தேமாதரம் சொல்லுறவங்களுக்கு மட்டும்தான் உரிமை மத்தவங்க எல்லாம் இரண்டாம் தரம் ன்னு சட்டம் கொண்டுவரனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை