சத்தீஸ்கரில் நக்சல்களை பிடிக்க 3 நிரந்தர முகாம்கள் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல்களை பிடிக்க 3 நிரந்தர முகாம்கள் அமைப்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: சத்தீஸ்கரில், நக்சலைட்களை வேட்டையாடுவதற்காக, மூன்று நிரந்தர முகாம்களை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அமைத்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர், ரமண் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பஸ்தார் மாவட்டத்தில், அபுஜ்மத் என்ற மலைப்பகுதி உள்ளது.அடர்ந்த வனப் பகுதியான இங்கு, நக்சலைட்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.இந்த வனப் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், தொடர்ந்து அங்கேயே நீண்ட நாட்கள் தங்கி இருந்து கண்காணிக்க, போதிய வசதிகள் இல்லலை.இதனால், அங்கிருந்து, ஒருசில நாட்களிலேயே வெளியேறிவிடும் நிலை உள்ளது.கடந்த ஆண்டு மட்டும், இந்த பகுதியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 37 பேர், நக்சலைட்களால் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், அபுஜ்மத் பகுதியில் பாதுகாப்பு பணியை பலப்படுத்த, மூன்று நிரந்தர போலீஸ் முகாம்களை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அமைத்துள்ளது.நாராயண்பூர், பிஜாபூர், பஸ்ரூர் வனப்பகுதிகளை இணைக்கும் இடங்களில், நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கெங்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளன என்பது, பாதுகாப்பு காரணங்களுக்காக, ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.இந்த முகாம்களில், ஆயுதங்கள், வெடி பொருட்கள், ஆளில்லா கண்காணிப்பு விமானம், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை