மருந்துகள் விலையை குறைக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

மருந்துகள் விலையை குறைக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: 'மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், ஏழை மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தலைநகர், டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர், எம்.சி.மேத்தா, 1985ல் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.'நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் பி லோகுர், குரியன் ஜோசப், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது; அப்போது, அமர்வு கூறியதாவது:காற்று மாசால் ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தற்போது, நாட்டில் மருந்துகளின் விலை மிகவும் அதிக மாக உள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.மருந்துகளின் விலையைக் கண்காணிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், டில்லியில் உள்ள, குறிப்பிட்ட நான்கு மருத்துவமனைகளில், அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.'ஆட்ரினார்' என்ற ஊசி மருந்தின் அதிகபட்ச விலை, 189 ரூபாய்; மருத்துவமனைகளுக்கு அது, 14.70 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், மருத்துவ மனை, 5,138 ரூபாய் வசூலித்துள்ளது, என, கூறப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NRK Theesan - chennai,இந்தியா
09-மார்-201819:43:52 IST Report Abuse
NRK Theesan டில்லியில் உள்ள, குறிப்பிட்ட நான்கு மருத்துவமனைகளில், அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.'ஆட்ரினார்' என்ற ஊசி மருந்தின் அதிகபட்ச விலை, 189 ரூபாய் மருத்துவமனைகளுக்கு அது, 14.70 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், மருத்துவ மனை, 5,138 ரூபாய் வசூலித்துள்ளது, என, கூறப்பட்டுள்ளது.குற்றம் செய்வது யார் ?குற்றம் நிரூபிக்கப்பட்டால் மருத்துவமனைகளை அரசுடமை ஆக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X