அம்பேத்கர் சிலை மீது 'பெயின்ட்' வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் சிலை மீது 'பெயின்ட்' வீச்சு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், அம்பேத்கர் சிலை மீது, சிவப்பு, 'பெயின்ட்' ஊற்றப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியது. திருவொற்றியூர், கிராமத் தெருவில், அம்பேத்கரின் மார்பளவு சிலை உள்ளது. இதற்கு, இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர், சிலையின் மீது சிவப்பு பெயின்ட் ஊற்றினர். நேற்று காலை, சிலை மீது பெயின்ட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர், செசாங் சாய், 'இரு நாட்களில், சம்பவத்தில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்தனர்.பின், சிலை மீதான பெயின்டை, பொதுமக்கள் அகற்றினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை