சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் பெருநகர மண்டலமாக மாறுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் பெருநகர மண்டலமாக மாறுகிறது

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி மண்டலமாக அறிவிக்க, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.
உத்தரவு : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை ஒட்டியுள்ள, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மாவட்டங்களில், நகர்ப்புற வளர்ச்சி வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தற்போது, 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ள, சி.எம்.டி.ஏ., எல்லையின் பரப்பளவை, 8,878 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நிர்வாக ரீதியான பணிகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கிஉள்ளனர். பொதுமக்களின் கருத்துக்களும் பெறப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, சமீபத்தில் ஆய்வு செய்த, வீட்டுவசதி துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவு:சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்தை, 'சென்னை பெருநகர வளர்ச்சி மண்டலம்' என்ற பெயரில் செயல்படுத்த வேண்டும் என, சி.ஏ.ஜி., எனப்படும், நுகர்வோர் அமைப்பு மனு அளித்துள்ளது.அறிக்கைஇதுகுறித்து, உரிய விளக்கத்தை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அரசுக்கு அனுப்ப வேண்டும். அத்துடன், இது தொடர்பான பயிலரங்கை, மார்ச் முதல் வாரத்தில் முடித்த விபரங்களையும், அரசுக்கு அளிக்க வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி மண்டல உருவாக்கத்தில், டி.டி.சி.பி., அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப, புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் அடங்கிய அறிக்கையையும், அரசுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X