500 அரிசி ஆலைகள் விற்பனைக்கு தயார் என அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

500 அரிசி ஆலைகள் விற்பனைக்கு தயார் என அறிவிப்பு

Added : மார் 09, 2018
Advertisement

பாபத்லா பொன்னி நெல் விளைச்சல் அதிகரிப்பால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நஷ்டத்தில் இருந்து தப்பிக்க, 500 அரிசி ஆலைகள் மூடப்பட்டு உள்ளதுடன், பல ஆலைகளில், அரிசி உற்பத்தி, 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 2016ல் வறட்சி நிலவியதால், பாபத்லா பொன்னி நெல், விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், ஆலை உரிமையாளர்கள், வங்கிகளில் கடன் பெற்று, 2017 ஜனவரியில், அதிகளவில் கொள்முதல் செய்து இருப்பு வைத்தனர்.கடந்தாண்டில், பாபத்லா பொன்னி, கிலோ, 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், அதே நெல் தற்போது, கிலோ, 23 ரூபாய்க்கு விற்பனைஆகியது. இதனால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நெல்லுக்கு, வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.மதுரையைச் சேர்ந்த பிரபல நிறுவனம், வங்கியில் பெற்ற, 80 கோடி ரூபாய் கடனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதுடன், பணத்தை செலுத்த மறுத்து விட்டதால், வங்கிகள், அரிசி ஆலைகளுக்கு வழங்கிய கடனை திரும்பப் பெற, தீவிரம் காட்டி வருகின்றன.பல ஆலைகள், இருப்பு வைத்த நெல்லை, குறைந்த விலைக்கு விற்றன; பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக, சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உட்பட, தமிழகம் முழுவதும், 500 அரிசி ஆலைகள் விற்பனை செய்ய தயாராக உள்ளதாக, உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.தமிழக நெல் அரிசி வணிக சம்மேளன முன்னாள் மாநில துணைத் தலைவர், சியாமளநாதன் கூறியதாவது:தமிழகத்தில், சிதம்பரம், புவனகிரி, கள்ளக்குறிச்சி, திருச்செங்கோடு, விழுப்புரம், உளுந்துார்பேட்டை விவசாய கூட்டுறவு சங்க குடோன்களில், 20 லட்சம் மூட்டை பாபத்லா பொன்னி நெல் இருப்பு உள்ளது.இன்னும் சில மாதங்களில், பாபத்லா பொன்னியின் அறுவடை துவங்க உள்ளதால், நெல்லின் வரத்து அதிகரித்து, தேவைக்கு அதிகமாகவே விற்பனைக்கு வரும்.இதனால், நெல், அரிசி விலையில் சரிவு இருக்கும் என்பதால், இயக்கத்தில் உள்ள அரிசி ஆலைகளும், நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், தங்களின் உற்பத்தியை, 50 சதவீதம் வரை குறைத்துள்ளன. மத்திய அரசு, நெல், அரிசி விற்பனைக்கு விதிவிலக்கு அளிக்காததும், தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள், அரிசி ஆலைகளை குறிவைத்து, 'ரெய்டு' நடத்தி வருவதும், இந்த தொழிலுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. அரிசியின் அத்தியாவசிய தேவையை கருதி, வங்கிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கெடுபிடி காட்டுவதை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
----- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X