'அம்மா' ஸ்கூட்டிக்கு திடீர் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' ஸ்கூட்டிக்கு திடீர் அழைப்பு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: 'அம்மா' இருசக்கர வாகன திட்டத்தில், பயனாளிகள் திடீரென அழைக்கப்பட்டு, ஒட்டுமொத்த தவணை செலுத்தி, வாகனத்தை எடுக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதால், பயனாளிகள் அதிருப்தியடைந்துஉள்ளனர்.சென்னையை தொடர்ந்து, தமிழகம் முழுதும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில், வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்பு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டியலின்படி, மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், வங்கி மூலம், கடனாக வாகனத்தை பெறும்பட்சத்தில், அவர்கள், நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்திய பின்பே, அவர்கள் வங்கிக் கணக்கில், மானியம் சேர்க்கப்படும். அதன்படி, வாகனம் எடுப்பவர்களுக்கு, அதிகபட்சம், ஒரு மாதத்துக்குள், மானியத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும்.சேலம் மாநகரில், வரும், 12ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், சோனா கல்லுாரியில், இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடக்கிறது. கடந்த, 6 இரவு, திடீரென்று, மாவட்ட திட்டப்பிரிவு மற்றும் மாநகராட்சி அலுவலகம் மூலம், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளை தொடர்பு கொண்டு, 'இரு நாட்களில், முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 'அதோடு, உங்கள், ஆர்.சி., புத்தகம், வாகன சாவி ஆகியவற்றை, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். முதல்வர் நிகழ்ச்சியில், அவை, உங்களுக்கு மானியத்துடன் வழங்கப்படும்' என, தெரிவித்தனர்.இதுதொடர்பான விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்காமல், திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால், குறுகிய காலத்துக்குள் வாகனங்களை எடுக்க முடியுமா என, பல பயனாளிகள் அதிருப்தியடைந்து உள்ளனர். சிலர், அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
09-மார்-201811:50:19 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எனாமாவே கொடுத்துட்டால் மிக சந்தோஷமாக வாங்கிக்கொள்வர்.. கடன வாங்கனுமா என சிந்திக்கின்றனர் போலும் .சிலர். இனாம் என்று ஒழிகிறதோ அன்றுதான் மனிதன் மனிதனாக உலா வருவான்.சந்தோஷமாக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை