1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கியாச்சு 'ஆர்டர்!'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கியாச்சு 'ஆர்டர்!'

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோடைக்கால மின் தேவையை சமாளிப்பதற்காக, 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம், மூன்று நிறுவனங்களுக்கு, 'ஆர்டர்' வழங்கியுள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, குறுகிய காலம் மற்றும் நீண்ட கால அடிப்படையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் வாங்குகிறது. அதன்படி, வரும் கோடை காலத்தில், மின் வாரியம், 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு செய்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் கேட்டது.அதை பரிசீலித்த ஆணையம், மார்ச்சில், 550 மெகாவாட்; ஏப்ரலில், 450 மெகாவாட் மின்சாரம் வாங்க, சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, 'காயத்ரி, ஸ்ரீசிமென்ட்ஸ், டி.பி., பவர்' ஆகிய, மூன்று நிறுவனங்களிடம் இருந்து, மேற்கண்ட அளவுக்கு, மின்சாரம் வாங்குவதற்கு, மின் வாரியம், தற்போது ஆர்டர் வழங்கியுள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஒரு யூனிட் மின்சாரத்தை, 4.31 - 4.35 ரூபாய் என்ற விலைக்கு வாங்க அனுமதி வழங்கியது. மின் வாரியம், 4.20 ரூபாய்க்கு, 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்க ஆர்டர் தந்துள்ளது' என்றார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை