எல்.இ.டி., பல்பு மீண்டும் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எல்.இ.டி., பல்பு மீண்டும் விற்பனை

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மத்திய அரசின், குறைந்த விலை, எல்.இ.டி., பல்பு உள்ளிட்ட மின் சாதனங்களின் விற்பனை, நேற்று முதல், மின் கட்டண மையங்களுக்கு அருகே, மீண்டும் துவங்கியுள்ளது.மத்திய அரசின், தேசிய அனல் மின் கழகம், பவர்கிரிட், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து, 'எனர்ஜி எபிஷியன்ட்' என்ற கூட்டு நிறுவனத்தை துவக்கி உள்ளன. இந்நிறுவனம், தமிழகத்தில், மின் வாரியத்தின், முக்கிய மின் கட்டண மையங்களுக்கு அருகே, தன் ஏஜன்சிகள் வாயிலாக, எல்.இ.டி., பல்பு, டியூப் லைட், மின் விசிறி உள்ளிட்ட சாதனங்களை விற்கிறது. இவை, குறைந்த மின்சாரத்தில் இயங்குவதுடன், விலையும் குறைவு.இந்நிலையில், ஏஜன்சிகள் - எனர்ஜி எபிஷியன்ட் இடையே ஏற்பட்ட பிரச்னையால், மின் கட்டண மையங்களுக்கு அருகே, மின் சாதனங்களை விற்பது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து, சில தினங்களுக்கு முன், நமது நாளிதழில், விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, எல்.இ.டி., பல்பு உட்பட, குறைவான மின்சாரத்தில் இயங்கும், மின் சாதனங்களின் விற்பனை, மின் கட்டண மையங்களுக்கு அருகே, நேற்று முதல், மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
09-மார்-201812:38:53 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லது கொள்ளை லாப வியாபாரிகள் கஷ்டப்படுவார்கள் .. எல்லா இடங்களுக்கும் பரலாக வழங்கிடனும் வரவேற்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X