'லே - அவுட்' வரன்முறையில் சாலைகளை காணோம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'லே - அவுட்' வரன்முறையில் சாலைகளை காணோம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சாலைக்கான நிலம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதா என, ஆய்வு செய்யாமலேயே, அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை, நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., அதிகாரிகள், வரன்முறை ஒப்புதல் அளிப்பதாக, புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக நீட்டிக்கப்பட்ட அவகாசம், மே, 3ல் முடிகிறது. அங்கீகாரம் பெறாமல், 13 லட்சம் மனைகள், 27 ஆயிரம் மனைப்பிரிவுகள் உள்ளன. ஆனால், வரன்முறை கோரி, 30 ஆயிரம் மனைகள், 5,000 மனைப்பிரிவுகளின் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இதில், மனைப்பிரிவுகள் வரன்முறையில், அதிகாரிகள் அலட்சியத்தால், சாலைகளுக்கான நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தொழில் முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத் தலைவர், கே.எம்.சதானந்த் கூறியதாவது: மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதில், டி.டி.சி.பி., அதிகாரிகள், 'பிரேம் ஒர்க்' என்ற பெயரில், நிலத்தின் முந்தைய பரிமாற்றங்களை ஆய்வு செய்கின்றனர். ஆனால், விண்ணப்பதாரர்கள், லே - அவுட்டுக்கான சர்வே எண்ணில், மனைகளுக்கான உட்பிரிவுகளை மட்டுமே குறிப்பிடுகின்றனர். இதன்படி, சாலைக்கான நிலங்கள் உட்பிரிவு செய்யப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டதா என, ஆய்வு செய்யாமல், கொள்கை அளவில் ஒப்புதல் தரப்படுகிறது. இதனால், சாலைகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கான நிலங்-கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மனைப்பிரிவு வரன்முறையில், சாலைகளுக்கான நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என, சரி பார்க்காமல், நகரமைப்புத் துறையினர் ஒப்புதல் வழங்குகின்றனர். இதில், இறுதி ஒப்புதல் வழங்கும் போது, சாலைக்கான நிலங்கள் குறித்து விசாரித்தால், சிக்கல்எழுகிறது. எனவே, மனைப்பிரிவு வரன்முறையில், அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை, அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X