அனீபா வழக்கில் மாஜி கலெக்டருக்கு அழைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அனீபா வழக்கில் மாஜி கலெக்டருக்கு அழைப்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:வத்தலக்குண்டில் டி.எஸ்.பி.,யை தாக்கிய வழக்கில் முன்னாள் கலெக்டர் வெங்கடாச்சலம் ஆஜராகாததால், விசாரணை வரும் மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மதுரைக்கு கடந்த 2011ல் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வந்தார். அப்போது அவரை கொல்வதற்கு பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக தென்காசியை சேர்ந்த முகம்மது அனீபா தேடப்பட்டு வந்தார். இவர் வத்தலக்குண்டில் பதுங்கி இருந்த போது, சிறப்பு புலனாய்வு படை டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அவரை பிடித்தனர்.அவர் டி.எஸ்.பி.,யை தாக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஜாமின் பெற்ற முகமது அனீபா, கோர்ட்டில் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகிறார். வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனர். இந்த சம்பவம் நடக்கும் போது, அப்போதைய கலெக்டராக இருந்த வெங்கடாசலம் சாட்சி செல்வதற்கு அழைக்கப்பட்டு இருந்தார். அவர் வராததால், மாவட்ட நீதிபதி முரளி சங்கர் விசாரணை வரும் மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை