கோடநாடு கொலை வழக்கு: இருவருக்கு பிடிவாரன்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை வழக்கு: இருவருக்கு பிடிவாரன்ட்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி;கோடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாத இருவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.கோடநாடு கொலை வழக்கு விசாரணை, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, 700 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால்,'குற்றப்பத்திரிகையை மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்து வழங்க வேண்டும்' என, ஏற்கனவே, வக்கீல் சிவகுமார் கோர்ட்டில் மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி, சட்ட விதிகளை சேர்த்து, மீண்டும் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் சாமி, ஜம்ஷீர் அலி, சதீசன், சந்தோஷ் சாமி, வாளையார் மனோஜ், ஜித்தின் ராய் ஆகிய 7 பேர் ஆஜராயினர். இதில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திபுவை, போலீஸ் கஸ்டியில் ஆஜர்படுத்திய போலீசார், விசாரணை முடிந்ததும் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு ஆஜராகாத உதயகுமார், ஜிஜின் ஆயோருக்கு பிடிவாரன்ட் உத்தரவை மாவட்ட நீதிபதிவடமலை பிறப்பித்தார். வரும், 22ம் தேதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடக்க உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை