Donald Trump To Meet With North Korea's Kim Jong Un By May | மே மாதம் கிம் ஜோங் உன்-டிரம்ப் நேருக்கு நேர் சந்திக்க திட்டம்| Dinamalar

மே மாதம் கிம் ஜோங் உன்-டிரம்ப் நேருக்கு நேர் சந்திக்க திட்டம்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Donald Trump,Kim Jong un,North Korea,கிம் ஜோங் உன்-டிரம்ப் சந்திப்பு, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், ஏவுகணை சோதனை , அணு சோதனை,தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூங்-இல் யோங்க், வடகொரியா,வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன், Kim Jong un-Trump meeting, US President Donald Trump, missile test, nuclear test, South Korea national security adviser Zong-in yong, North Korea leader Kim Jong un,

வாஷிங்டன்: வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பும் மே மாதம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏவுகணை சோதனை மற்றும் அணு சோதனை நடத்திவந்த வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், இதனை குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தென்கொரியா அமைதி குழுவினர் கடந்த வாரம் வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன்னை சந்தித்தனர். இதனை அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆலோசிக்க தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூங்-இல் யோங்க், அமெரிக்கா சென்று அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்தார். பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
வட கொரியா தலைவரை தென்கொரியா குழுவினர் சந்தித்தது குறித்து டெனால்டு டிரம்ப் பாராட்டினார்.இதன் மூலம் அணு சோதனை குறைப்பு நடவடிக்கையில் கிம்ஜோங் உன் இறங்கியுள்ளதை தெரிவித்தேன். பின்னர் வட கொரிய தலைவர் கிம்ஜோங் உன் டிரம்ப்பை சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினேன். டிரம்ப்பும் சந்திக்க தயார் என்றார். வரும் மே மாதம் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக சந்திக்கின்றனர் என்றார்.
மேலும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு எங்கு என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
10-மார்-201805:31:18 IST Report Abuse
Nagan Srinivasan mootru ulakangalum
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மார்-201802:12:08 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல தகவல்... ஆசியாவிற்கு நல்லது..
Rate this:
Share this comment
Cancel
10-மார்-201800:57:49 IST Report Abuse
ஆப்பு வட கொரியாவில் நிலைமை மோசமாகி வருகிறது...எப்பிடியாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கிம் ஒலிம்பிக்கில் பங்கு கொள்வது, ஏவுகணைகளை வீசுவது போன்ற செயல்களில் இறங்குகிறார். அவருக்கு துணைபோவது சீனா...சீனாவை இந்த அளவு வளர விட்டது அமெரிக்கா... சீனாவின் கொட்டம் அடங்கினால் எல்லாம் சரியாகும்...இது வடகொரியாவை பொறுத்த வரை மட்டுமே...உலக அளவில் மெரிக்கவின் கொட்டமும் அடங்கி வருகிறது...எல்லாம் நன்மைக்கே
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
08-ஏப்-201809:57:57 IST Report Abuse
mohanசீனாவை இந்த அளவு வளர விட்டது.. எந்த அளவு,.. சீன மக்கள் 100 சதவிகிதம் பேர் கல்வி அறிவு பெற்று வருகின்றனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிகிறது. இலவசம் கிடையாது. இங்கே நம் சாம்பிராணிகள், இலவசம் கிடைத்தால் போதும் என்று தெருவில் உருளும் மாக்கான்கள்.. சீன அப்படி அல்ல. ஒரு நல்ல குடும்ப தலைவன் இருந்தால். அந்த குடும்பம் நல்ல பெயரெடுக்கும். சீன தலைவர்கள் யாரும், தம் மக்கள் சோம்பேறிகளாக விட விருப்பம் இல்லை. ஊழல் இல்லை. நம்மை காட்டிலும், ஒரு ஐம்பது வருடம் முன்னே உள்ளனர். இது சாதாரண மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. இதற்க்கு காரணம், மக்களின் கலாச்சார வாழ்க்கை முறை. அன்பு நேர்மை. இது அங்கே 97 % சதவிகிதம் உள்ளது. அங்கே நதி நீர் பங்களிப்பு, விவசாய முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் ஆகியவை சிறந்து விளங்குகிறது... அது போக எல்லா அரசு துறைகளும், 100 சதவிகிதம், நேர்மையாக வேலை செய்கின்றன. அதை ஒப்பிட்டால், இங்கே 20 சதவிகிதம், வேலை நடக்கிறதா என்பதே சந்தேகம். காரணம் வேலை செய்யும் முறை, சரியாக வகுக்க படாத ஒன்று.. சீன முன்னேறி இருக்கிறதென்றால், சீன மக்களின் நேர்மையான உழைப்பும், ஸ்திரத்தன்மையான அரசியலும் தான் காரணம்..இங்கே நம் நாட்டு மக்கள், சென்டிமென்டல் இடியட்ஸ் ஆக உள்ளனர். இதை பல நீதிபதிகளும் சொல்லி உள்ளனர்..இந்தியா முன்னேற வேண்டும் என்றால் தனி மனிதன் தானாக முன்னேற வேண்டுமே தவிர, அரசியல் வாதிகளை சொல்லி பயன் இல்லை... மக்கள் மன நிலையின் ஒட்டு மொத்த விளைவு தான் அரசியல் தலைகள்... அதனால் அரசியல் வாதிகளை சொல்லி பயன் இல்லை.. ஒரு சின்ன பயனை பார்த்து, என்ன வேலை செய்கிராய் என்றால், விவசாய கூலி என்கிறான், சிகரெட் குடிக்கிறான்,சாயந்தரம் மது குடிக்கிறான், அரசு பள்ளிகளில் பயிலும் பயிலும் மாணவர்கள் மது அருந்தி வருகின்றனர். ஆசிரியைகள் சொல்ல முடியாத நிலை. இந்தியாவில் 60 வருடங்களுக்கு முன் ஆசிரியர்களுக்கு மதிப்பு இருந்தது. இப்பொழுது இருக்கிறதா.. சீனாவில் இருக்கிறது.. இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன.. இங்கே இருந்து யாரையும் குறை கூற வேண்டாம். ஏன் ஜெர்மனி, 100 வருடங்களுக்கு முன் அணைத்து நதிகளையும் இணைத்தனர். இங்கே ஏன் இன்னும் இணைக்க வில்லை... எல்லாம் மக்களின் நாடுதழுவிய அளவில், ஒன்றிணைக்கும், platform எதுவும் இல்லை. இந்தியா மக்கள் இன்னும் விழிப்படைய வில்லை.. அதற்க்கு காரணம், சரியான கல்வி முறை இல்லை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை