Do you know how much Priya Prakash Varrier is earning per social media post? | "கண்ணழகி "பிரியா வாரியருக்கு ஒரு பதிவின் சம்பளம் ரூ.8 லட்சம் ரூபாய்!!!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"கண்ணழகி "பிரியா வாரியருக்கு ஒரு பதிவின் சம்பளம் ரூ.8 லட்சம் ரூபாய்!!!

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Priya Warrior,Social media,Kannalagi, பிரியா பிரகாஷ் வாரியர், ஒரு அடார் லவ், கண்ணழகி, ஜிமிக்கி கம்மல், சோஷியல் நெட்வொர்க், மலையாள திரையுலகம், 
Priya Prakash Warrior, oru Adhar Love, Kannalagi, Jimmy Kamal, Social Network, Malayalam Film Industry,

திருவனந்தபுரம் : மலையாள திரையுலகில் விரைவில் வெளிவர உள்ள ஒரு அடார் லவ் படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர், சோஷியல் நெட்வொர்க்கில் ஒரு போஸ்டிற்கு ரூ. 8 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களின் மூலம், யார் வேணும்னாலும் ஒரேநாளில் பிரபலம் ஆகமுடியும் என்பதற்கு தற்போதைய நிகழ்வு சாட்சி. பழைய விஷயங்களையே, சற்று புதுமையாக செய்தாலே பிரபலமாகி விடலாம்..
ஜிமிக்கி கம்மல் பாடல், தேசிய அளவில் பிரபலமானதை தொடர்ந்து, மலையாள திரையுலகமும், தற்போது தங்கள் பட புரோமோஷன்களுக்கு சமூக வலைதளங்களை நாட துவங்கியுள்ளது.
விரைவில் வெளிவர உள்ள ஒரு அடார் லவ் படத்தின் பாடலான மாணிக்யா மலராயா பூவி பாடலின் திரைவடிவமும், கதாநாயகியின் பாவனைகளும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவின. இந்த படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர், ஒரேநாளில் தேசிய அளவில் பிரபலமானார். இதன்மூலம் பிரபலமான பிரியா வாரியரின் இன்ஸ்டாகிராமில் ஒரேநாளில் 606 ஆயிரம் பேர் பாலோயர்களாக சேர்ந்தனர். பாலோயர்களின் எண்ணிக்கை அடிப்படையில், பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்களை முந்திய பிரியா வாரியர், சர்வதேச அளவில், ஹாலிவுட் ரியாலிட்டி ஷோ பெர்சனாலிட்டி கெய்லி ஜென்னர், சர்வதேச கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டினோவை முந்தினார்.
இந்தியா டிவி நடத்திய ஆய்வின் படி, பிரியா வாரியருக்கு, சமூக வலைதள போஸ்டின் மூலம், ரூ. 8 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பள விவகாரம் உண்மையா, என்பதை பிரியா வாரியர் தான் விளக்க வேண்டும்!!!

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-மார்-201808:11:55 IST Report Abuse
Srinivasan Kannaiya காற்று உள்ள போதே தூற்றினால் தான் உண்டு...
Rate this:
Share this comment
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
10-மார்-201806:01:39 IST Report Abuse
Balan Palaniappan கண்ணழகிக்கு எட்டு லக்ஸமானாலும் ரஜினிகாந்துக்கு ஐம்பது கோடியானாலும் சம்பளம் குடுப்பது நாமில்லை போல் தோன்றினாலும் அதன் ஆணி வேறை ஆராய்ந்தால் இந்த பணமெல்லாம் பாமரனாகிய நீயும் நானும் தான் கொடுக்கிறோம் என்பது புலப்படும். ரஜினிக்கு சம்பளம் கூட கூடஅவன் நடிக்கும் படத்தின் சினிமா டிக்கெட்டும் அதிகமாகும் (அல்லது பிளாக்கில் அதிகமாக விற்கப்படும்) அதேபோல் தான் இந்த கண்ணழகி விஷயமும். இவளுக்கு இவ்வளவு சம்பளம் என்றால் அங்கெ வரும் விளம்பர கம்பெனி அவளுக்கு பணம் குடுத்து அதை சரிசெய்ய அவர்கள் செய்யும் பொருட்களின் விலையை ஏற்றுவார்கள். லாஷ்க்ஷம் கோடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. நாம் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து இயற்கை பொருட்களை உபயோகிப்போமேயானால் நாம் வாழ்க்கை சிறப்புறும், ஆரோக்கியமாக இருக்கலாம் கண்ணழகிக்கு எட்டு ரூபாய்கூட கிடைக்காது ரஜினி மண்ணை கவ்வுவார்.
Rate this:
Share this comment
Balan Palaniappan - Chennai,இந்தியா
10-மார்-201809:58:16 IST Report Abuse
Balan Palaniappanநான் கடந்த 15 ஆண்டுகளில் மூன்றே மூன்று படங்கள் தான் பார்த்திருக்கிறேன். என்னைப்போல் எல்லோரும் இருந்திருந்தால்/இருந்தால் ரஜினிக்கு எப்படி 50 கோடி சம்பளம் தருவார்கள்? நன்றாக யோசியுங்கள். தமிழ் மக்கள் சினிமாவால் முட்டாளாக்கப்பட்டிருகிறார்கள். தமிழன் என்று சினிமாவை புறக்கணிக்கின்றானோ அன்றுதான் நம் வாழ்வு சிறப்புறும், நம் சமுதாயம் உயர்வுறும். தமிழில் ஹிந்தியில் வரும் படங்களை விட அதிகமாக வருகின்றன. ஹிந்தி சினிமா தோராயமாக இந்தியாவின் 75% மக்களை சென்றடைகிறது. இதன் விளக்கம் என்னவென்றால் 75% மக்கள் சினிமாவுக்கு செலவிடும் பணத்தை வெறும் ஏழு சதவீதமே உள்ள தமிழர்களிடம் வசூலிக்க பார்க்கிறார்கள். இதுதான் உண்மை. இதை உணர்ந்தாள் தான் தமிழன் உறுப்படுவான்....
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
10-மார்-201803:07:46 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அவங்க எதை பண்ணுனாலும் அதை முதலில் தமிழர் மீது தான் பிரயோகித்து பார்ப்பார்கள், ஏனெனில் நம்மாளுங்க தான் .... ஆச்சே
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201822:21:31 IST Report Abuse
Mani . V எத்தனையோ உலக அழகிகள் தமிழகத்தில் வெளி உலகுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். பிரியா வாரியார் ஒன்றும் அழகு இல்லை (யப்பா...... முகத்தில் உள்ள முகப்பரு கரும் புள்ளிகள்....பா.......). ஆனாலும் வீணாய் போன விளம்பர உலகம் லட்சங்களில் கொட்டிக் கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த தொகையை பசிப்பிணி போக்கும் கடவுள்களான விவசாயிகளுக்கு கொடுத்தாலாவது புண்ணியம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
09-மார்-201821:52:09 IST Report Abuse
கைப்புள்ள என்னடா இது அன்னிக்கு என்னடானா எங்க நைனாவை கண்ணழகி கேயார் விஜியான்னு சொல்லி ஓட விட்டாங்க, அப்புறம் காந்த கண்ணழகி பானுப்ரியா ன்னு சொல்லி என்னைய அலைய விட்டாங்க, இன்னிக்கு பாவம் இந்த விடலை பசங்கள ப்ரியா வாரியார்ன்னு சொல்லி சுத்தி விட்டிருக்கானுக. ஆக மொத்தம் இந்த காந்த கண்ணழகிங்க பின்னாடி சுத்துறது நிக்காது போலியே.
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
09-மார்-201821:01:09 IST Report Abuse
THINAKAREN KARAMANI "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்க்கிட்டுக் கொடுக்கும்" என்கிற பழமொழி கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர் விஷயத்தில் எவ்வளவு உண்மையாய் இருக்கிறது பாருங்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
09-மார்-201820:48:27 IST Report Abuse
கைப்புள்ள அப்புடியேஏஏஏஏஏ என்னைய பாத்து கண்ணடிக்கிற மாறி என்ன ஒரு பரவசம். இந்த போட்டோவை 10 க்கு 10 பிரிண்ட் போட்டு ஊடு பூரா ஒட்டி வெச்சு செம ஜாலியா இருக்கலாம். டேய், யாருடா அவன், யோவ் பெருசு ஒந்தி போன்னு சொல்றது. நான் இன்னும் யூத்து தாண்டா. பாரு ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் போட்டு இருக்கேன்.
Rate this:
Share this comment
Cancel
rajaram - delhi,இந்தியா
09-மார்-201819:52:12 IST Report Abuse
rajaram இவளை மாதிரியான சிறுபெண்கள் வழி தவறி விடுகிறார்கள் இவள் காசுக்கு கண் அடித்து பெண்களை கெடுக்கிறாள்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-மார்-201819:08:12 IST Report Abuse
வெகுளி அப்பறம் என்னய மட்டும் எதுக்கு கண்ணடித்தற்கு முட்டி போட வச்சாரு தமிழாசிரியர்..... வீட்டுல எங்க அப்பா வேற தனியா விளாசினார்..... அம்மா நாள் பூரா பேசலை.... சே.....வட போச்சே....
Rate this:
Share this comment
Cancel
n Subramanian - palakkad,இந்தியா
09-மார்-201818:30:40 IST Report Abuse
n Subramanian உண்மையில் வெரி க்யுட், பார்த்தவுடன் பரவசம், she deserved
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
09-மார்-201821:53:55 IST Report Abuse
கைப்புள்ளதம்பி கியூல பின்னாடி வாங்க. நாங்க முன்னாடி நின்னுட்டு இருக்கோம்ல. அவ எனக்குதான். உங்களுக்கு பிரியா சோரியார்ன்னு புதுசா ஒருத்தி வந்து இருக்கலாம். அவ பின்னாடி போங்க. போங்க தம்பி......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை