காவிரி வாரியம்: 4 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காவிரி வாரியம்: 4 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Cauvery Affairs,Girija Vaidyanathan,Central Government,காவிரி மேலாண்மை வாரியம், 4 மாநில அரசுகள் ஆலோசனை கூட்டம், கர்நாடகா,  காவிரி விவகாரம் , மத்திய அரசு அழைப்பு, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், 
Cauvery Management Board, 4 State Governments Consultative Meeting,, Karnataka,  Central Government Call, Cauvery Arbitration, Chief Secretary Girija Vaidyanathan,

புதுடில்லி: காவிரி வாரியம் அமைப்பது தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில தலைமை செயலர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி 192 டி.எம்.சி., காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும்.இந்த நீரை 177.25 டி.எம்.சி.,யாக குறைத்து, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று நடந்தது.இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழகம் தரப்பில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட உள்ளது. அது மட்டுமின்றி, தமிழகத்தின் கோடைக்கால தேவைக்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி 63 டி.எம்.சி., நீர் திறக்கவும் கோரிக்கை விடப்படவுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மார்-201813:58:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பேசி முடிங்கப்பா , இதைவைத்து ஒரு கட்சி பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறது. தற்போது அதன் பெரியார் கொள்கை என்ற முகமூடியும் கிழிக்கப்பட்டிருக்கிறது. திணிக்கப்பட்ட வாரிசு என்ன செய்வது என்று முழித்துக்கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
30-மார்-201803:45:27 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>காங்கிரஸ் திமுக அதிமுக இந்த மூவருக்குமே காவிரித்தான் துருப்பு சீட்டு அதான் பாத்துண்டே இருக்கோம் ,பல ஆண்டுகளாக அதிகமழைகொட்டியினால் உபரிநீர் தான் நம்மளுக்கு கிட்டும் என்ற நிலையே இருக்கோம் என்பதுதான் உண்மை...
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
09-மார்-201813:23:46 IST Report Abuse
chails ahamad இந்த பகுதியில் கருத்துகள் பதிவதாக எண்ணி கொண்டு சில பா ஜ அபிமானிகள் முந்தைய மத்திய மாநில ஆட்சியாளர்களை குறை கூறி கடந்த காலங்களை எண்ணியே பதிவு செய்துள்ளார்கள் , உள்ளபடியே தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் தமிழக மக்களுக்கு இழைத்திடும் துரோகத்தை கவனத்தில் கொள்ள மறுத்து , தமிழர்கள் என்ற உணர்வினை குழி தோண்டி புதைத்திடவே முயற்சிக்கின்றார்கள் , நாம் வாழும் காலங்களில் நம்முடைய பிற்கால சந்ததியினர்களின் வாழ்வாதார பிரச்சனையாகும் காவிரி நீர் என்பதாகும் , பல காலங்கள் போராடி ஏதோ கிடைத்த வரைக்கும் திருப்தியடைவோம் என்ற நிலைகளில் நாம் தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளோம், அதனை தமிழர்களுக்கு துரோகத்தையே இத்தனை காலமும் செய்து வந்த வடநாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மத்திய ஆட்சியாளர்களாகிய பா ஜ கட்சியினர்கள் , அற்ப கால ஆதாயமாக கர்நாடக தேர்தல் லாபம் கருதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீர்த்திட செய்கின்ற நடவடிக்கைகளாக ஒன்றன் பின் ஒன்றாக , ஆலோசனை கூட்டம் அது , இது என செயல்படுத்திட விழைகின்றார்கள் , நம்முடைய உரிமையை காலில் போட்டு மிதித்திட முயற்சிக்கின்றார்கள் , உள்ளபடியே தமிழர்கள் என்ற உணர்வில் இந்த பா ஜ அபிமான கருத்தாளர்கள் இருந்தால் , தங்களது தலைமையை வலியுறுத்தி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்திட முயற்சிப்பதே சிறப்புக்கு உரியதாக இருந்திடும் , அதனை செயல்படுத்த வக்கற்று இருப்பார்களானால் இந்த தினமலர் வாசக நண்பர்களால் தமிழர்களின் விரோதியாக இந்த கருத்தாளர்களை அடையாளம் காணப்படுவார்கள் என்பதும் உறுதியாகும் . வளர்க தமிழர்களின் ஒற்றுமையுணர்வுகள் .
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
09-மார்-201813:04:07 IST Report Abuse
chails ahamad யாரை ஏமாற்ற இந்த ஆலோசனை கூட்டம் தமிழனின் தலையில் மிளகாய் அரைப்பதற்கு முடிவு செய்து விட்ட மத்திய பா ஜ ஆட்சியாளர்கள் , காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தனது ஆளுமையின் சக்தியை பயன்படுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதை செயல்படுத்திடுவதே தார்மீக பொறுப்பாக இருந்திடும் , அற்ப கால கர்நாடக தேர்தல் ஆதாயத்திற்காக தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்திட முயற்சிப்பது என்பதே ஆலோசனை கூட்டம் நடத்திடும் செயல்களாகும், பல காலங்கள் எத்தனையோ முறை பேச்சு வார்த்தைகள் , பல நீதி மன்றங்கள் ஏறி இறங்கி இறுதி தீர்ப்பாக உச்ச நீதிமன்றத்தில் கூறியபடி , காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்திடுவதை எதிர்பார்த்து காத்துள்ள தமிழக மக்களின் விருப்பங்களை , விவசாயிகளின் துயர் களைய , உடனடியாக காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதை செயல்படுத்துவதே மத்திய ஆட்சியாளர்களின் ஆளுமையை நிலை நிறுத்தும் செயல்களாகும் , அதுவே இந்திய ஒற்றுமையை நிலை நிறுத்திடும் என்ற நிலையில் , தேவையற்ற ஆலோசனை கூட்டங்கள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீர்த்திட செய்திடும் செயல்கள் என்பதை நாட்டு நடப்பு அறிந்தவர்கள் அறிந்தே உள்ளார்கள் .
Rate this:
Share this comment
09-மார்-201813:55:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்சவூதி ஷேக்கை ஏமாற்றத்தான் இந்த கூட்டம்....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201812:50:25 IST Report Abuse
Pasupathi Subbian இந்த நான்கு மாநிலத்திலும் , பி ஜெ பி ஆட்சி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை தவிர மற்ற மூன்று மாநிலங்களில் காலூன்றக்கூட முடியாமல் பி ஜெ பி தள்ளாடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
09-மார்-201812:15:26 IST Report Abuse
suresh காவேரி நீரை பெறுவது, அதன் அளவு என மட்டும் அல்லாமல், பெறப்படும் நீரின் தரத்தையும் உறுதி படுத்த வேண்டும், தமிழகம் வரும் காவேரி நீர் மாசுடைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசிற்கு இன்று அறிக்கையளித்துள்ளது, அதனை தமிழக அதிகாரிகள் சுட்டி காட்டுவார்களா ?
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
09-மார்-201812:03:56 IST Report Abuse
s.kumaraswamy தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து போராட துப்பில்லை... மய்யம் தய்யம் என புலம்பிக் கிட்டு திரிகிறானுக...
Rate this:
Share this comment
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
09-மார்-201811:53:29 IST Report Abuse
சொல்லின் செல்வன் முடிவுதான் தெரியுமே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு. மத்திய அரசு அதனை வழிமொழிந்தது. இதுதானே?
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
09-மார்-201811:14:58 IST Report Abuse
suresh கர்நாடக தேர்தல் வெகு விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது, அதன் பின் உடனே தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்து விடும், அதன் பின் அதனை காரணம் காட்டி கர்நாடக தேர்தல் முடியும் வரை தீர்ப்பை அமுல்படுத்த இயலாது என சொன்னாலும் சொல்ல வாய்ப்பு உண்டு, ஆறு வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டால் அதனை எதிர் கொள்ளும் விதமாக நான்கு மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை சுட்டி காட்டி, விரைவில் அமைக்கப்படும் சொன்ன சொல்லி, கால அவகாசம் கேட்பதற்காகவே இந்த நான்கு மாநில அரசு கூட்டத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இறுதி தீர்ப்பு, மேல்முறையீடு இல்லை என திட்டவட்டமாக வந்த தீர்ப்பு என்பதால், நீதிமன்ற கண்டனத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என்ற பயமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
09-மார்-201811:07:39 IST Report Abuse
suresh தீர்ப்பை கர்நாடக தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்கும் முயற்சியே இந்த கூட்டம் .
Rate this:
Share this comment
Cancel
Priyan - Madurai,இந்தியா
09-மார்-201811:01:56 IST Report Abuse
Priyan தமிழகம், கேரளா, புதுச்சேரி, (UT), ஆந்திரா, கர்நாடகா, மொத்தம் 5 மாநிலங்களா? 4 மாநிலங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை