சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி கொலை

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (95)
Advertisement
 Meenakshi college,student Ashwini ,student murder,சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி, கத்தியால் குத்தி கொலை, மீனாட்சி கல்லூரி, ரகசிய கண்காணிப்பு கேமரா, போலீசார் விசாரணை, மாணவி அஸ்வினி கொலை, Chennai college student Ashwini, Secret surveillance camera, police investigation, student Ashwini murdered,

சென்னை: சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சென்னை கேகே நகரில் மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அஸ்வினி. வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அஸ்வினியை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கத்தியால் குத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியை சேர்ந்த அழகேசன் என்பதும், சுகாதார துறையில் பணிபுரிந்து வரும் அவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அஸ்வினி அளித்த புகாரின் பேரில் அழகேசனை போலீசார் கைது செய்ததாகவும், இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெற்றோர் விழிப்பாக இருந்திருந்தால்..

கல்லூரி மாணவி கொலை குறித்து தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவிக்கையில், பிற்பகலில் கல்லூரி முடிந்து வெளியே வந்த போது அஸ்வினியை அழகேசன் கொலை செய்துள்ளார். மதுரவாயிலில் வாட்டர் கேன் போடும் அழகேசனுடன் நட்பாய் ஆரம்பித்து காதலித்து வந்துள்ளார் அஸ்வினி. பெற்றோர் கண்காணிப்போடு இருந்திருந்தால் அஸ்வினி கொலை நடந்திருக்காது. அஸ்வினியை கொலை செய்தபின் அழகேசனும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பொதுமக்கள் தாக்கியதில் அழகேசன் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அழகேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகேசனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தர போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரை நண்பனாக பார்த்து ஆரம்பத்திலேயே புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan - chennai,இந்தியா
10-மார்-201801:32:26 IST Report Abuse
Nagarajan இந்த கொலைக்கு காவல் துறை அலட்சியம் தான் காரணம் அவர்கள் ஏற்கனவே புகார் செய்துள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
09-மார்-201821:07:03 IST Report Abuse
suresh சிலையை உடைத்தவனையும் பெண்ணை கொன்றவனையும் பிடித்தது திராவிட தமிழ் மகனே
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-மார்-201820:41:12 IST Report Abuse
ஜெயந்தன் சொம்பு, ஒல்லி பிச்சான் , இன்னு பிற கேடு கெட்ட நடிகர்களின் படம் தான் இதற்கெல்லாம் காரணம்.. இந்த கேடு கெட்ட சினிமாவிலிருந்து தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக துடிக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
09-மார்-201821:02:45 IST Report Abuse
Darmavanஏன் இந்த மூளை கெட்ட ஜனங்கள் அவன் பின்னால் போகிறார்கள் ?...
Rate this:
Share this comment
Cancel
மனோ - pudhucherry,இந்தியா
09-மார்-201820:28:03 IST Report Abuse
மனோ முதலில் நட்பில் ஆரம்பித்து பின் காதலில் ... பெண்கள் கவனமாய் இருக்க வேண்டும். யாருடன் பழகவேண்டும் என்பதிலும் பழகும் நபர் எவ்வித சலனத்திற்கும் ஆளாகாதவாறு கண்டிப்புடனும் மிகுந்த எச் சரிக்கையுடனும் பழகுதல் வேண்டும். பெற் றோர் கள் மூன்றாவது நபர் தொடர்ந்து வீட்டிற்கு வர அனுமதி அளித்தல் கூடாது. பெண்பிள்ளைகளே உங் களை அன்புடன் கேட் டுக்கொள்கிறேன். நன் றாக படியுங் கள் உங்களது பெற்றோர் நிச் சயம் நீங் கள் விரும்புகின்ற வாழ்வை அமைத்துக் கொடுப்பார்கள். எவனோ ஒருவனை நம்புவதைவிட பெற்றவர்களை நம்புங்கள். இந்தமாதிரியான சம்பவங்கள் நிகழாமல் இருப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
09-மார்-201821:19:00 IST Report Abuse
sureshசரியான கருத்து...
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-மார்-201820:25:46 IST Report Abuse
S.Baliah Seer "மதுரவாயலில் வாட்டர்கேன் போடும் அழகேசனுடன் நட்பாய் இருந்து காதலித்து வந்துள்ளார் அஸ்வினி". ஆக கொலைக்கு காரணம் காதல்,சினிமா பாணியில். மகளிர் தினத்தன்று எங்கள் வீட்டின்முன் ஒரே கூச்சலும் ,அழுகுரலும். வாசலில் வந்து பார்த்தபோது ஒரே கூட்டம். அழுதவள் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு கல்லூரி மாணவி. அவளை கன்னத்தில் மாறி, மாறி அறைந்தவன் 40 கிலோ எடை தேறாத ஒரு எலும்பன். எல்லோரும் அவனை வளைத்துக் கொண்டு தாக்க முற்பட்டபோது அவன் கொஞ்சம் கூட பயமின்றி "நீ தாண்டி போன் பண்ணி வரச்சொன்ன என்றான். அவளோ நான் +2 படிக்கும்போதே என்னை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும்படி கட்டாய படுத்தி வரான்,இவனை யாரென்றே எனக்கு தெரியாது என்றாள். கூட்டம் அவன் மீது எகிறுவதை பார்த்த அவள் ,ஏய் நீ சீக்கிரம் இங்கிருந்து போடா ..சீக்கிரம் போடா என்று அவனைக் காப்பாற்ற முற்பட்டபோது அவளை உற்று பார்த்தேன். அவள் ஒரு திரு D என்று புரிந்தது. அவனை யாரென்றே தெரியாது என்றவள் அவனைக் காப்பாற்ற முற்பட்ட விதம் அவளைக் காட்டிக் கொடுத்தது. நான் இதுவரை இதுபோன்ற கேஸ்களில் சிலவற்றை நேரில் பார்த்தும்,பலவற்றை ஊடகங்கள் மூலம் தெரிந்தும் அதற்கான விடை இதுதான்: சமூக,பொருளாதார நிலையில் மிகவும் கீழிருக்கும் நபர்களிடையே இதுபோன்ற காதல்,நடுவழியில் அடிதடி,ஆசிட் வீச்சு போன்றவை அதிகம் நடை பெறுகின்றன. இவர்கள் குடும்பத்தினர் தம் பெண்/பையனைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-மார்-201820:23:02 IST Report Abuse
Nallavan Nallavan இவன் தண்ணி கேன் போடுற பய ..... காலேஜுல படிக்கிற பொண்ணுக்கு ஆசைப்பட்டிருக்கான் .... சுவாதிக்கு ராம்குமார் ஆசைப்பட்ட மாதிரி ..... . ஒரு தராதரம் வேணாம் ?? இந்தப் பொண்ணும் வசதியான ஊட்டுப் பொண்ணாத் தெரியல ... பொண்ணுங்களும் மொத மேறி இல்ல .... காலேஜுல சேர்ந்துட்டாலே ஏதோ ரெக்கை மொளைச்சி மாதிரி அவங்களுக்கு ஒரு பீலிங் .... என்ன டிசைனோ தெரியல ....
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
09-மார்-201821:08:52 IST Report Abuse
தமிழ்வேள்இந்த பெண்தான் காரணம். பள்ளி நாட்களில் இவள் பின் அவன் சுற்றியிருக்கிறான். அவன் படிப்பில் கோட்டைவிவிட்டுவிட்டான். இவள் கல்லூரிக்கு சென்றுவிட்டாள். அவனால் இயலவில்லை. இன்று ஸ்டேட்டஸ் உயர்ந்தவுடன் அவனை உதறி வேறு ஒரு மேல்மட்டப்பயலிடம் தொடர்பு,,அவளுக்கு. இவனுக்கு காண்டு..தன்னை உருப்படாமல் செய்துவிட்டு வேறு ஒரு பார்ட்டியுடன் திரிவதை பொறுக்காமல் போட்டு தள்ளிவிட்டான். கேட்க கதை போல இருந்தாலும், இன்றைய பல காதல் கொலைகளுக்கு இதுதான் காரணமே. பெண்கள் ஒழுங்கு கிடையாது. நடிகைகளை பார்த்து கெட்டு அழித்து போகிறார்கள். தாய் தகப்பன் சரியில்லை. வளர்ப்பு கேவலம். இன்று தெருவில் நிறுத்திவிட்டது. ஊமை பெருச்சாளி வீட்டை கெடுக்கும் என்பதை போல இன்றைய பெண்கள், ஒரு கெத்துக்கு, தன் பின்னால் பையன்கள் சுற்றுவதை பெருமையாக நினைக்கிறார்கள். அது விஷமாக முடிகிறது...ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது நண்பரே. ஸ்வாதி கதையும் அப்படித்தான்...கலர் மட்டுமே வெள்ளை. மற்றபடி சாக்கடை......
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மார்-201820:12:01 IST Report Abuse
Rajendra Bupathi வர வர இந்த பொட்ட புளளைங்க லவுசு தாங்க முடியல? தெறத்தி தொறத்தி காதலிக்க வேண்டியது/ அப்புறம் ஏதோ ஒரு காரணத்தால நிராகரிக்க வேண்டியது? அப்புறம் இப்படிதான் பாதி ஆயுசுலேயே கதை முடிஞ்சு போகும்? இதெல்லாம் பெத்தவங்க கண்காணீப்புல இருந்தா இப்படி எல்லாம் நடந்து இரூக்க வாய்ப்பு இல்லை?
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
09-மார்-201821:15:12 IST Report Abuse
தமிழ்வேள்தன் பின்னால் சில விடலைகள் சுற்றினால், தனக்கு கெத்து என்று திரிவதால், செலவு செய்ய ஆள் கிடைத்துவிட்டது என்று செலவு வைத்தால், பின்னால் சுற்றுபவன் வேறு எதிர்பார்ப்பு கொள்கிறான். செலவு செய்தவன் சும்மா இருப்பானா? தாய் தகப்பன் சரியில்லை...வளர்ப்பு சரியில்லை.......
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
09-மார்-201820:10:26 IST Report Abuse
Kuppuswamykesavan இளமையில் வரும் பெரும்பாலான காதல் என்பவைகள், உடல் சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடே எனலாம். முழுமையாக தான் காதலிக்கும் ஒருவரை, இன்னொருவர் கொலை செய்யவே தைரியம் வராது எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-மார்-201819:17:31 IST Report Abuse
Lion Drsekar இன்றைக்கு இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை ஈடுபடுத்துவதே அரசியல் கட்சிகள் தான். ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வளர்ச்சி, எந்த மாற்றமும் வரப்போவதே இல்லை,
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
09-மார்-201819:00:48 IST Report Abuse
s.kumaraswamy ஜாதி ஒழிப்பு திருமண பெரியாரின் கொள்கையில் வந்த திராவிட மண்ணே வணக்கம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை