இமயமலை கிளம்பினார் ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இமயமலை கிளம்பினார் ரஜினி

Updated : மார் 10, 2018 | Added : மார் 10, 2018 | கருத்துகள் (71)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Actor Rajini,Himalayas,Aanmeega arasiyal,நடிகர் ரஜினி, ரஜினிகாந்த், இமயமலை, ரஜினி அரசியல் கட்சி, ஆன்மிக அரசியல், எம்.ஜி.ஆர் ஆட்சி, இமயமலை பயணம், காவிரி மேலாண்மை வாரியம்,  Rajinikanth,  Rajini Political Party, Spiritual Politics, MGR Rule, Himalayan Travel, Cauvery Management Board,

சென்னை : அரசியல் கட்சி துவக்க உள்ள நடிகர் ரஜினி, இன்று(மார்ச் 10) இமயமலைக்கு கிளம்பி சென்றார்.

தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் எனக்கூறிய ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள ரஜினி, 'எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவேன்' என, அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சினிமா, அரசியல் என, பம்பரமாக சுழன்ற ரஜினி, இன்று இமயமலைக்கு புறப்பட்டார். விமானம் வாயிலாக, சிம்லா செல்லும் ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் மற்றும் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். குகையில், தன் குரு பாபா மற்றும் ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறுகிறார். சமீபத்தில், தன் நண்பர்களுடன் இணைந்து, இமயமலையில் கட்டிய, தியான மண்டபத்திற்கும் செல்ல உள்ளார்.
பதிலளிக்க விரும்பவில்லை:

கிளம்புவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: அரசியல் இயக்கம் துவங்க முடிவெடுத்த பின்னர் இமயமலை பயணம் மேற்கொள்ள உள்ளேன். இமயமலைக்கு சென்று 8 ஆண்டுகள்ஆகிறது. புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. குறைந்த பட்சம் 10 நாள் முதல் 15 நாள் வரை தங்க திட்டமிட்டு உள்ளேன். தர்மசாலா, பாபா குகைக்கும் சென்று வழிபட உள்ளேன். இமயமலை சென்ற பின்னா்தான் எத்தனை நாள் அங்கு இருப்பேன் என முடிவு செய்யப்படும். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை . இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan mageswary - chennai,இந்தியா
15-மார்-201812:18:13 IST Report Abuse
raghavan mageswary ஆன்மிகம் காட்டும் வழி அன்பு, அன்பை வெளிப்படுத்தும் வழி தன்னலமற்ற தொண்டு. இதையெல்லாம் புரிந்து கொள்ளாதவர்கள் எந்த மலைக்கு போனாலும் நமக்கு பிரயோஜனமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
10-மார்-201819:26:57 IST Report Abuse
Krish Sami ரஜினி இமயமலைக்கு போவது அவருடைய தனி விருப்பம். கேள்வி இல்லை. ஆனால், அரசியலில் இவர் தீவிரமாக செயல்படுவார் என்ற நம்பிக்கையை இன்னமும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எம் ஜி ஆர் என்பது இன்னமும் மூன்றெழுத்து மந்திரம் தான். ஆனால், ரஜினியின் ஜபம் உண்மையானது தானா? மக்கள் நம்பி விடுவார்களா?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
10-மார்-201819:22:23 IST Report Abuse
K.Sugavanam பாவம்ப்பா..பாபா குகைக்குள் காவேரி ஓடப்போகுது..
Rate this:
Share this comment
Cancel
Parthiban V - Tamilnadu,இந்தியா
10-மார்-201816:21:06 IST Report Abuse
Parthiban V தலைவரே உங்கள் பயணம் இனியதாக அமைய உங்கள் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
10-மார்-201816:10:44 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN இந்த கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருது. நம்ம அறிவை இழந்த பகுத்தறிவாதிகள் ரொம்ப தெளிவானவங்க. அதுனால, தேர்தல் சமயத்தில், ஒரு மாசம், பீர், பிரியாணி மற்றும் டெய்லி சிலவு தொகை, இதற்கும் மேலாக ஒரு கணிசமான தொகை பெற்று கொண்டு, வோட்டை விற்று விடுவோம். கடைசியா எல்லாவற்றிக்கும் திரு மோடிஜி தான் என்று சொல்லிவிட்டு, தூங்கிருவோமில்ல. போவீங்களா.
Rate this:
Share this comment
Cancel
Srikanth - chennai,இந்தியா
10-மார்-201815:35:52 IST Report Abuse
Srikanth இவரு இமயமலையிலே இருக்கட்டும்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
10-மார்-201818:47:09 IST Report Abuse
K.Sugavanamரிஷிகேஷ் ல ரிஸார்டு மாதிரி யத்ரிநிவாஸ் கட்டி இருக்காராம்...ஓ சம்போ.....
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
10-மார்-201814:37:54 IST Report Abuse
Rajavelu E. நல்லவனுக்கெல்லாம் வருது................................
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-மார்-201813:28:12 IST Report Abuse
vbs manian இவர் நிஜமாக நல்ல தலைவர் ஆக வேண்டுமானால் இமயமலைக்கு போவதை விட தமிழ் நாடு முழுதும் ஊர் ஊரக கிராமம் கிராமமாக சுற்றி உள்ளூர் பிரச்சினைகள் மக்கள் தேவைகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த சுற்றுப்பயணம் இவரை பட்டை தீட்டி செம்மைப்படுத்தும். இவரின் அரசியல் வாழ்க்கை மெருகு ஏறும்
Rate this:
Share this comment
Cancel
Shanmugam - Manama,பஹ்ரைன்
10-மார்-201813:03:20 IST Report Abuse
Shanmugam இமய மலை உச்சியில் இருந்து தமிழ்நாட்டின் மூளை முடுக்கெல்லாம் கண்காணித்து துல்லியமான ஆட்சியை கொடுக்க நினைக்கலாம். தலைமை செயலகமும் மாற்றி அமைக்க வாய்ப்பு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மார்-201812:56:16 IST Report Abuse
Pugazh V @Sandru - Chennai:: நீங்கள் சொல்வது கரெக்ட். பின்ன என்ன சார் சும்மா சும்மா ஆண்டவன் சொல்றார் நான் செய்றேன் னு புருடா விடறது மட்டுமல்ல, நாத்திகர் களை விட மோசமான அவமதிப்பில்லையா இது? ஆண்டவருக்கு வேற வேலயே இல்ல... ரஜினி க்கு எதாவது சொல்றது தான் வேலயா? எப்டி சொல்றாராம்? வாட்ஸப்பா வாய்ஸ் காலா? ஏமாற்றுக்காரர் ரஜினி யை இப்போதே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை