கர்நாடக வேட்டை தடுப்பு மையத்திற்கு கம்பம் வன அதிகாரி பெயர்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடக வேட்டை தடுப்பு மையத்திற்கு கம்பம் வன அதிகாரி பெயர்!

Added : மார் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக வேட்டை தடுப்பு மையத்திற்கு கம்பம் வன அதிகாரி பெயர்!

கம்பம்: கர்நாடகாவில் காட்டு யானை தாக்கி பலியான கம்பம் வன அதிகாரி மணிகண்டன் பெயரை, அங்கு புலிகள் வேட்டை தடுப்பு மையத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி மணிகண்டன். கர்நாடகாவில்நாகர்ஹோலே வனஉயிரின சரணாலயத்தில் தலைமை வனப்பாதுகாவலராக இருந்தார். அங்கு மார்ச் 3 அதிகாலை காட்டு யானை தாக்கியதில் பலியானார். அவரின் உடல் கம்பத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அதையொட்டி கர்நாடகாவில் நடந்த இரங்கல்கூட்டத்தில் பேசிய அம்மாநில உதவி வனப்பாதுகாவலர் பிரசன்னகுமார், ''மணிகண்டன் சிறந்த அதிகாரி. அவரது நினைவாகநாகர்ஹோலே புலிகள் சரணாலயத்தில் கட்டப்படும் புலிகள் வேட்டை தடுப்பு மையம் மற்றும் வீரணாஹோஷகாலிபகுதியில் கட்டப்படும் கண்காணிப்பு கோபுரம்ஆகியவற்றிற்கு மணிகண்டன் பெயர் சூட்டப்படும். இது அவருக்கு நாம் செய்யும் மரியாதை,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
10-மார்-201818:28:23 IST Report Abuse
Rangiem N Annamalai பண உதவி செய்யலாமே ?.ஏன் அனைவரும் மௌனம் சாதிக்கிறார்கள் ?.வன அரசு அதிகாரிக்கு பணம் கொடுத்தால் ஓட்டு வராதா ?.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
10-மார்-201813:30:57 IST Report Abuse
pradeesh parthasarathy iru maanila otrumai valarattum ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை