'விட்டு கொடுக்க மாட்டோம்' அமைச்சர் ஜெயகுமார் பேட்டி| Dinamalar

'விட்டு கொடுக்க மாட்டோம்' அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

Added : மார் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், தமிழகம் விட்டுக் கொடுக்காது,'' என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.
டில்லியில் நடந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின், நிருபர்களிடம், அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:பல்வேறு பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டுமென, தமிழக வர்த்தக சங்கங்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து, மத்திய அரசிடம் முறையிடப்பட்டு உள்ளது.
ஆலோசனை
தமிழகத்துக்கு தர வேண்டிய, நிலுவை நிதியை விரைந்து பெறுவதற்கு, அழுத்தம் தரப்பட்டு வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக் கெடுவில், இரு வாரங்கள் தான் முடிந்துள்ளன. இந்த விஷயத்தில், தீவிரமாக முயற்சிகளை எடுப்பதற்கு, இன்னும் போதுமான நாட்கள் உள்ளன.
மத்திய நீர்வளத் துறை செயலர் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசின் நிலை என்ன என்பதை, அதிகாரிகள் உறுதியாக தெரிவித்து விட்டனர். இருப்பினும், மாற்றுத் தரப்பிலிருந்து சில கருத்துக்களை கூறியுள்ளனர். எது எப்படியாயினும், மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், தமிழகம் விட்டுக் கொடுக்காது.
சூழ்நிலை
பிரதமரைச் சந்திப்பது என, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது உண்மை தான். அதற்காக, சம்பந்தப்பட்ட நீர்வளத் துறையே, திறந்த மனதுடன் பேச்சுக்கு அழைக்கும்போது, அதில் பங்கேற்கக் கூடாது என்பது சரியல்ல.தற்போதைய சூழ்நிலையில், எதுவும் கைவிட்டுப்போய் விடவில்லை. காவிரி விவகாரத்தில், தமிழகம், தன் உரிமையை நிலைநாட்டியே தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை