பைனான்ஸ் அதிபரிடம் வழிப்பறி: 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைனான்ஸ் அதிபரிடம் வழிப்பறி: 3 பேர் கைது

Added : மார் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்:காரில் சென்ற பைனான்ஸ் அதிபரிடம், நகை, பணத்தை வழிப்பறி செய்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 47; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 7ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த நவீன், 26, என்பவரை டிரைவராக அழைத்துக் கொண்டு, கோவைக்கு காரில் சென்றார். திருவையாறு அடுத்த, கருப்பூர் பகுதியில், டிரைவர் நவீன், சாலையோரம் காரை நிறுத்தி உள்ளார். டூ வீலரில் அங்கு வந்த மூன்று பேர், அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி, ரமேஷ் அணிந்திருந்த, 15 சவரன் நகை, மூன்று மொபைல் போன், 30 ஆயிரம் ரூபாய், ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை பறித்து, தப்பினர். இது தொடர்பாக, கபிஸ்தலம் போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.டிரைவர் நவீன், நண்பர்களுடன் திட்டமிட்டு, ரமேஷிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட, கும்பகோணத்தைச் சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை