என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல்| Dinamalar

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல்

Updated : மார் 11, 2018 | Added : மார் 11, 2018 | கருத்துகள் (222)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Rahul Gandhi ,Singapore,Congress leader Rahul,ராஜிவ் காந்தி கொலை, தந்தை கொலை , தந்தையின் கொலையாளிகளுக்கு மன்னிப்பு, ராகுல் அறிவிப்பு , காங்கிரஸ் தலைவர் ராகுல், சிங்கப்பூரர் சுற்றுப்பயணம் ,ராகுல் தங்கை பிரியங்கா,கல்லூரி மாணவர்கள், 
Rahul Gandhi murder, father murder, forgiveness for fathers killers, Rahul announcement, Congress leader Rahul, Singapore tour, Rahul sister Priyanka, college students,

சிங்கப்பூர் : சிங்கப்பூர் சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் படுகொலை செய்யப்பட்டது குறித்து கூறுகையில், பல ஆண்டுகளாக நானும், எனது சகோதரி பிரியங்காவும் எங்கள் தந்தையை கொன்றவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தோம். மன வேதனையில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. ஆனால் தற்போது அவர்களை முற்றிலுமாக மன்னித்து விட்டோம் என்றார். ராகுலின் இந்த பதிலை கேட்டு அங்கு கூடி இருந்த அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய ராகுல், அரசியலில் எடுத்த சில நிலைப்பாடுகளுக்காக எங்கள் குடும்பம் கொடுத்த விலை தான் எனது பாட்டி இந்திரா மற்றும் தந்தை ராஜிவின் படுகொலை. அரசியலில் தவறான உந்துதலால் ஒரு விஷயத்தின் பின்னால் நின்றால் நீங்கள் மரணிப்பீர்கள். எங்களுக்கு தெரியும் எங்கள் பாட்டியும், தந்தையும் இறந்து போவார்கள் என்று.

என் தந்தையும், தானும் கொல்லப்படுவார்கள் என என் பாட்டி என்னிடம் கூறினார். என்னுடன் பாட்மின்டன் விளையாடிவர்களே எனது பாட்டியை 1984 ல் கொன்றார்கள். 2016 ல் எனது தந்தை கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா பரிந்துரைத்தார். ஆனால் காங் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது அரசின் நிலைப்பாடு, அதில் எனது தனிப்பட்ட கருத்தை கூற முடியாது.

எனது தந்தை கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு சூழலே மாறி விட்டது. காலை, பகல், இரவு என எப்போது 15 பேர் சூழ்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். 2009 ம் ஆண்டு பிரபாகரன் இறந்ததை டிவி.,யில் பார்த்தேன். இரண்டு விதமான உணர்வுகள் என் மனதில் எழுந்தது. ஒன்று, இவரை ஏன் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். இரண்டாவது, அவரின் குடும்பம் மற்றும் குழந்தைகளை நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன்.
நான் ஏன் அவ்வாறு உணர்ந்தேன் என புரியவில்லை. உடனே பிரியங்காவிற்கு போன் செய்து பேசினேன். அவர் நமது அப்பாவை கொன்றவர். அவர் இறந்ததற்காக சந்தோஷப்பட வேண்டும். ஆனால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. ஏன் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை என தெரியவில்லை என்றேன். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன் என பிரியங்கா என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (222)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
faiz - colombo,இலங்கை
16-மார்-201812:17:38 IST Report Abuse
faiz பிரபாகரன் அவர்கள் வெறும் அம்புதான் அனுப்பியது அமெரிக்கா என்பதால் சந்தோசப்பட இயலாது
Rate this:
Share this comment
Cancel
16-மார்-201812:05:02 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ்  வெங்கட் நாட்டில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இது தான் பிரச்னையே இறந்தவர் முன்னாள் பிரதமர் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ராகுலில் ஒன்று விட்ட சித்தப்பா , அல்லது சித்திக்கு இது போல நடந்து அவர் மன்னித்தால் யாரும் கவலைப்பட போவதில்லை. இறந்தவர் இந்த நாட்டின் பிரதமர், அவர் சம்பந்தப்பட் விஷயத்தையே இத்தனை காலம் இழுத்துக் கொண்டிருந்தால் மற்றவர்கள் கதி. இந்த நாட்டில் தந்தையையோ கொன்றவர்களை மன்னிக்கும் நல்லவர்கள் வாழும் போது பசிக்காக பிக் பாக்கெட் அடிப்பவனையும், காமத்தீன் துாண்டுதால் பெண்ணை வல்லுறவு கொள்பவனையும் ஏன் மன்னிக்க கூடாது. பேசாமல் நீதிமன்றங்களுக்கு பதில் வீதிக்கு ஒரு பாவமன்னிப்பு அரங்குகளை கட்டிவிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
15-மார்-201815:38:31 IST Report Abuse
madhavan rajan உங்கள் தந்தையால் கொல்லப்பட்டவர்களின் குடும்பபத்தினர் உங்களையும் உங்கள் குடும்பத்தினர்களையும் மன்னித்து விட்டார்களா என்று தெரிந்து கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X