நூலகமாக மாறியது சலூன்: படிக்காத மேதையின் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூலகமாக மாறியது சலூன்: படிக்காத மேதையின் சாதனை

Added : மார் 11, 2018 | கருத்துகள் (8)
Advertisement
சலூன், நூலகம், கணேசன்,

புதுக்கோட்டை: மணல்மேல்குடியில், எட்டாவது வரை மட்டும் படித்து, கவிஞராகவும், சலுான் கடையை நுாலகமாகவும் மாற்றியவர், அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியில், 'இந்தியன்' என்ற பெயரில், சலுான் வைத்துள்ளவர், கணேசன், 50. பொதுவாக, சலுான்களில், வண்ண காலண்டர்கள், சினிமா போஸ்டர்கள், பெண்களின் கவர்ச்சி படங்கள் இருக்கும். கணேசனின் சலுான், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நுாலகமாக செயல்படுகிறது. இங்கு, திருக்குறள், திருவாசகம், மு.மேத்தா, வைரமுத்து கவிதைகள், அப்துல் கலாம், கருணாநிதி, கண்ணதாசன் உட்பட, பலர் எழுதிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்களை வைக்க இடமின்றி, அட்டை பெட்டிகளிலும், கணேசன் அடுக்கி வைத்துள்ளார். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குபடிக்கும் மாணவர்கள், தங்களுக்கு தேவையான புத்தகங்களை, இலவசமாக எடுத்து சென்று படிக்கின்றனர். அப்பகுதியில், கணேசனை, அனைவரும் கவிஞர் எனவும், இவரது கடையை, சலுான் லைப்ரரி எனவும் கூறுகின்றனர்.

கணேசன் கூறியதாவது: இளம் வயதில், தமிழாசிரியராக வேண்டும் என்பது, என் ஆசை. எட்டாவது படிக்கும் போது, என் தந்தை இறந்து விட்டதால், அவர் நடத்தி வந்த சலுான் கடையை, நான் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், பள்ளி படிப்பு பாதியிலேயே நின்று விட்டது. படிக்கிற ஆசையில், அனைத்து விதமான புத்தகங்களை, அன்று முதல், இன்று வரை படித்து வருகிறேன். திறந்தவெளி பல்கலையில், எம்.ஏ., வரலாறு, அண்ணாமலை பல்கலையில், பி.லிட்., அஞ்சல் வழி கல்வியில், அடிப்படை இந்தி படித்துள்ளேன். தற்போது, திறந்தவெளி பல்கலை மாணவர்களுக்கு, யோகா பேராசிரியராகவும் உள்ளேன். பள்ளி குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு ஆர்வத்தை துாண்ட வேண்டும் என்பதே, என் நோக்கம். அதனால், திருக்குறள், நாலடியார், அவ்வையார் பாடல் தெளிவுரைகளை வாங்கி, அரசு பள்ளி மாணவர்களிடம் கொடுத்து வருகிறேன்.

மேலும், 2011ல், 'ஒற்றைக்கீற்று' 2016ல், 'அவிழ்ந்தே கிடக்கும் கூந்தல்' ஆகிய இரு கவிதை நுால்களை எழுதி வெளியிட்டு உள்ளேன். தற்போது, கல்வெட்டியல் பற்றிய பட்டய படிப்பு படிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-மார்-201817:19:28 IST Report Abuse
Bhaskaran உங்களின் தமிழார்வத்துக்கு சிரம் தாழ்ந்தவணக்கம் நீங்கள் சிகைத்திருத்தம் செய்வதுமட்டுமில்லாது சிரத்துக்குள்ளிருக்கும் மூளைக்கும் வேலைத்தருவது பாராட்டுக்குரியது
Rate this:
Share this comment
Afsaral Ali - Bangalore,இந்தியா
14-மார்-201811:52:10 IST Report Abuse
Afsaral Aliஏன் நாம ரெண்டு பெரும் சேர்ந்து அவர்க்கு சில புத்தகம் வாங்கி தரக்கூடாது? நான் ஈயும் நிலையில் உள்ளேன் ..தாங்கள்? நன்றி ....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-மார்-201816:57:14 IST Report Abuse
Nallavan Nallavan ஆண்டாள் குறித்து சைக்கோக்கள் பேசியதை மனதில் வைக்காதீர்கள் .... இவரைப் பாராட்டுங்கள் ..... இவருக்குள்ளும் ஒரு இலக்கியவாதி உண்டு என்று நிரூபித்துவிட்டார் ....
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-மார்-201810:55:02 IST Report Abuse
சீனி வாட்சப்பில் வெட்டி பார்வார்ட் பண்ணும் இந்த காலத்தில், மத்தவங்களுக்கு உபயோகமா ஏதோ செஞ்சிருக்கார். பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
11-மார்-201820:53:22 IST Report Abuse
Subramanian பாராட்டுகள்
Rate this:
Share this comment
Cancel
MUDIVAI MANI - Johannesburg,தென் ஆப்ரிக்கா
11-மார்-201814:13:48 IST Report Abuse
MUDIVAI MANI Mikuntha nanri. Panivaana vanakkangal Martu m vaalthukkal
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
11-மார்-201814:11:29 IST Report Abuse
ushadevan முடியை கட் செய்து அழகாக்குகிறார் படிக்க வைத்து கல்வியால் நேரத்தை மெருகேற்றுகிறார். பாராட்டுக்கள் சகோதரா.
Rate this:
Share this comment
Cancel
11-மார்-201812:14:25 IST Report Abuse
SubramaniamRadhakrishnan so proud of you. I think we have to teach ruling idiots.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை