மாணவருக்கு கமிஷனர், 'சல்யூட்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவருக்கு கமிஷனர், 'சல்யூட்'

Added : மார் 12, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மாணவருக்கு கமிஷனர், 'சல்யூட்'

பெங்களூரு : பெங்களூரில், எதிரில் வந்த மாணவர் ஒருவர் கூறிய வணக்கத்திற்கு பதிலாக, போலீஸ் கமிஷனர், சுனீல் குமார், கையை உயர்த்தி, 'சல்யூட்' செய்த வீடியோ, சமூகதளங்களில் பரவி வருகிறது.

கர்நாடகாவில், காங்.,கைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனராக, சுனீல் குமார், கடந்தாண்டு ஆகஸ்டில் பதவியேற்றார். இந்நிலையில், பெங்களூரில், மல்லையா மருத்துவமனைக்கு சென்று விட்டு, வெளியே வந்த சுனீல் குமாருக்கு, அவ்வழியே வந்த ஒரு மாணவர், சல்யூட் அடித்தார்.

அதைப் பார்த்த சுனீல் குமார், தன் வலது கையில் இருந்த சிறு தடியை, இடக்கைக்கு மாற்றி, வலது கையால், அந்த மாணவருக்கு சல்யூட் அடித்தார். இது தொடர்பான வீடியோ, சமூக தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, இந்த வீடியோவை விரும்புவதாக, 80 ஆயிரம் பேர், 'லைக்' பட்டனை அழுத்தி உள்ளனர். 1,500 பேர், இந்த வீடியோவை தங்கள், 'பேஸ்புக்' பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த, ஒரு பேஸ்புக் பதிவர், 'சிறந்த அதிகாரி; நீங்கள், கண்ணியமான பதவியில் இருந்தபோதும், சிறுவனுக்கு சல்யூட் செய்தது, என்னை நெகிழச் செய்துள்ளது' என, கருத்து பதிவு செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
12-மார்-201821:06:35 IST Report Abuse
Kuppuswamykesavan இப்படிப்பட்ட சிறுவர்கள்தான் எதிர்கால இந்தியாவை, வலுவுடன், ஆரோக்கியமாக, வளமாக இருக்க பாடுபடுவார்கள் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-மார்-201815:22:05 IST Report Abuse
தமிழ்வேல் அந்த பையனைப் பாராட்டனும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-மார்-201814:04:41 IST Report Abuse
Pasupathi Subbian காவல்துறையில் பல நல்லவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைவிட புல்லுருவிகள் அதிகம்பேர் உள்ளனர். எங்கே ஒரு காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்து அதற்க்கு ஒரு அத்தாட்சி பெற்றுவிடமுடியுமா , அது சுலபமா. ? ஏன் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் , துவாக்குடி மோட்டார் சைக்கிள் இறப்பு பற்றிய விசயத்திற்கு, காவல்துறையினர் போலி பெயர்களிலும், மக்களை மிரட்டியும் , வேலை செய்யமாட்டோம், புகார் வாங்கமாட்டோம், விசாரணை செய்யமாட்டோம் என்றும், இந்த நிகழ்சசி பற்றி ஊடகங்களிலும் , வலைத்தளத்திலும் , கண்டனம் தெரிவித்தவர்களை, அவன் இவன், என்று ஒருமையில், கேவலமாகவும் பேசி பதிவு அனுப்பி வைத்துள்ளனர். ஏறத்தாழ வெகு காவல்துறையினர் லஞ்சம் , ஒழுங்கீனம், போன்ற சட்டத்துக்கு புறம்பாக நடவடிக்கைகளை ஈடுபடுவதும், தங்களின் அதிகார துஷ்பிரயோகத்திலும் , பொதுமக்களை துன்புறுத்துவதிலும் ஈடுபடுவதால், அன்று சம்பவம் நடந்த இரண்டுமணி நேரத்துக்குள் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியது. காரணம், மக்களுக்கு , காவல்துறையின்மேல் உள்ள வெறுப்பு, இவர்கள் நாட்டை காப்பாற்றுவது போல தங்களை நினைத்துக் கொள்கிறனர், ஆனால் நாட்டை காப்பது நமது ராணுவத்தாரின் கடமை, வேலை, ஆனால் இவர்களுக்கு சட்டத்தை நிலைநாட்டுவது மட்டுமே வேலை, இவர்களின் கடமையை செய்ய இவர்கள் மறுத்தால், இவர்கள் சம்பளம் வாங்குவதே தண்டம் . அவ்வளவு உத்வேகம் இருக்கும் இவர்கள் , தங்களின் கடமைகளை , நேரம் காலத்தில் செய்தாலே பாதி வழக்குகள் தீர்ந்துவிடும். அதேபோல இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மேலதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளின் சிபாரிசை வைத்து தீயவர்களுக்கு உடன் போவது என்ற கொள்கையை நிராகரியுங்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X