கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ

Updated : மார் 12, 2018 | Added : மார் 12, 2018 | கருத்துகள் (75)
Advertisement

போடி : தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.

9 பேர் பலி
காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குரங்கணி வனப்பகுதிக்கு நேற்று 39 பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். இவர்களில் 12 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். காட்டுக்குள் டிரக்கிங் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உள்ளனர்.

குரங்கணி தீ : 9 பேர் பலி

இருள் சூழ்ந்ததால் சிலர் அங்கும் இங்கும் சிதறி ஓடி உள்ளனர். இதில் சிலர் பள்ளத்தாக்குகளுக்குள் விழுந்துள்ளனர். வனத்துறை, தீயணைப்பு துறை, சிறப்பு காவல் படையினர் விரைந்து செயல்பட்டதால் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும், 3 பேர் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்குகளுக்குள் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சடலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


மதியம் ஒரு மணியளவில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
12-மார்-201822:57:21 IST Report Abuse
X. Rosario Rajkumar சில விஷமிகள் எரிபொருள் கரிக்காக காட்டுத்தீயை உண்டாக்கும் நாசவேலையும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
12-மார்-201822:49:09 IST Report Abuse
kulandhaiKannan முந்திரிக் கொட்டைகள் நா.த, மமக, தமாக, தவாக வினரின் மேலான கருத்துகள் என்னவோ
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
12-மார்-201822:23:37 IST Report Abuse
Jaya Prakash சென்னை ட்ரெக்கிங் கிளப் பில் வெறும் ஈமெயில் id மட்டும் இருப்பததாக அரசாங்கம் சொல்லுதும்.... போன் நம்பர் இல்லை.... அவர்கள் போன மாதம்தான் ஒரு பிளட் கேம்ப் நடத்தினங்கோ.... அதன் தொலைபேசி எண் இது.... 8939096634 ... 9944253204 ... 9840411926 .... இதை நான் வலைதளயத்தில் தேடினது.... இதை நான் உறுதி செய்யவில்லை.... வலயத்தடத்தில் தேடினது மட்டுமே.... நானும் இந்த நம்பருக்கு போன் பண்ணவில்லை.... வாசகர்களும் செய்யவேண்டாம்.... பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு இதனால் ஒரு லீட் கிடைத்தால் இந்த நாட்டின் பிரஜை என்று என் கடமையை செய்த ஒரு திருப்தி கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-மார்-201819:36:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கடைசியாக வந்து சேர்ந்த கமாண்டோக்களுக்கு "ஓ" போடுங்கள்.. வாளி வைத்து கடலில் கொட்டிய பெட்ரோலை அள்ளிய அதிரடி படை எங்களுடையது.. டோலி வைத்து தூக்கி வரும் மீட்பு படைக்கு "ஓ" போடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Swaminathan -  ( Posted via: Dinamalar Android App )
12-மார்-201819:29:33 IST Report Abuse
Swaminathan காட்டு மிருகங்கள் ஊருக்குள் வந்தால் பயிர்களையும் வீடுகளையும் சேதம் செய்யும் சில உயிர்கள் பலியாகும் அதன் மதிப்பு குறைவு ஆனால் காட்டுக்கு சென்ற மனிதர்கள் அங்கு சிகரெட் பிடித்தல் தீமூட்டி குளிர்காய்தல் போன்ற அறிவு கெட்ட செயல்களால் காட்டில் ஏற்படுத்திய அழிவு மதிப்பிடமுடியாதது. மலை காட்டிற்கு இவர்கள் செல்லும்போது தீப்பிடித்து எரியவில்லை திரும்பிவரும்போது தீ எங்கும் பரவியிருக்கிறது இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது அவர்கள் தான் இந்த தீக்கு மூலகாரணம். குறுக்கீடு எதுவும் இல்லாமல் தீவிர விசாரணை செய்தால் உண்மை எது என்று தெரியும். அளவுக்கு அதிமான செல்வம் எதிலும் முன் எச்சரிக்கை இல்லாமை, யார் எப்படிபோனால் நமக்கு என்ன என்ற அலட்சியம், கட்டுக்கு அடங்காத ஆசைகள் மேலும் இவர்கள் செய்த தவறுக்கு அரசு இழப்பு தருவது என்பது ஏற்புடையதல்ல. நல்லது கெட்டது எதிலும் அரசியல் என்றாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
12-மார்-201819:26:07 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM கடந்த 4 வருடங்களாகவே மக்களுக்கு சொல்லொண்ணா துயரம் வந்து கொண்டே உள்ளது....இந்திய துணை கண்டத்தில் அமைதி இல்லை... எங்கும் கலவரம்... இயற்க்கை சீற்றம்.... துர் மரணங்கள் ...மழையின்மை ....அல்லது வெள்ளம்...மக்கள் மத்தியில் ஒருவித பயம் .... எப்படி வாழப்போகிறோம் என்ற அச்சம்...விலைவாசி உயர்வால் சோர்வு.....வியாபாரம் இல்லாததால் சோர்வு..... வேலை இல்லா திண்டாட்டத்தால் சோர்வு.... .இன்னும் ஒரு வருடத்தை ஜீரணிக்க கூட மக்களிடம் தெம்பு இல்லை ...சுதந்திர இந்தியாவின் மோசமான ஆண்டுகள் இவை தான்....
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
12-மார்-201821:24:11 IST Report Abuse
கைப்புள்ளகண்ணு பாக்கல, காது கேக்கல, மூக்குல மூச்சு விட முடில, வாயி பேசல, கை விழுந்திடிச்சு, கால் தூங்கிடிச்சு, இது எல்லாத்துக்குமே சேர்ந்து ஒரு மருந்து கொடுங்க. இதுக்கெல்லாம் ஒரே மருந்து டிக் 20 தான். இந்தா ஒரு பாட்டில் வாங்கி குடிச்சிட்டு நீயே போயி கண்ணம்மாபேட்டைல படுத்துக்கோ போ ன்னு விவேக் ஒரு படத்துல சொல்லுவாரு....
Rate this:
Share this comment
Cancel
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
12-மார்-201819:02:17 IST Report Abuse
கேண்மைக்கோ சேகர் பணத்தினால் விளையும் கொடுமையில் இதுவும் ஒன்று
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
12-மார்-201816:16:17 IST Report Abuse
Narayan இதுலயும் அரசியலான்னு கேக்கிறவங்கதான் ஒக்கி புயல் மீட்பு நடவடிக்கை சமயத்துல அதையும் அரசியல் ஆக்குனாங்க ... ஒக்கி புயல் மீட்பு நடவடிக்கை இரண்டு அரசும் செய்திருக்க வேண்டிய ஒன்று, ஆனால் மத்திய அரசு மட்டுமே செய்தார்கள், அதற்கான கீழ்த்தரமான விமர்சனமும் சில பாவாடைகளிடம் இருந்து பெற்றார்கள். இந்த காட்டுத்தீ முழுக்க முழுக்க மாநிலம் மட்டுமே செய்திருக்க வேண்டியது. அதிலும் துரிதமாக மத்திய அரசு செய்துள்ளது. பாராட்டுக்கள். எதுலதான் அரசியல் இல்ல... எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
12-மார்-201815:22:01 IST Report Abuse
Narayan இதுலயும் அரசியலான்னு கேக்கிறவங்கதான் ஒக்கி புயல் மீட்பு நடவடிக்கை சமயத்துல அதையும் அரசியல் ஆக்குனது... ஒக்கி புயல் மீட்பு நடவடிக்கை இரண்டு அரசும் செய்திருக்க வேண்டிய ஒன்று, ஆனால் மத்திய அரசு மட்டுமே செய்தார்கள், அதற்கான கீழ்த்தரமான விமர்சனமும் சில பாவாடைகளிடம் இருந்து பெற்றார்கள். இந்த காட்டுத்தீ முழுக்க முழுக்க மாநிலம் மட்டுமே செய்திருக்க வேண்டியது. அதிலும் துரிதமாக மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
கார்த்திக்,புனலூர்நாடு களத்தில் இணைந்து விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்ட காரூட் கமாண்டோ வீரர்களுக்கு நன்றி....
Rate this:
Share this comment
12-மார்-201819:21:46 IST Report Abuse
VnJayaramtx to say .let us salut them..kamal vaiko stalain ellam MP ellarum resin pananm soluvanga ipoo..hahahaha...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை