உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்கு ஆலோசனை; ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்கு ஆலோசனை
ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு

''ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குங்கள்,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்


ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில், தமிழகம் மற்றும் உ.பி.,யில், 'காரிடார்' எனப்படும், தொழிற்சாலை வழித்தடம் அமைக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, இந்த சிறப்பு ராணுவத் தொழிற்சாலை வழித்தடம் அமைப்பது குறித்த, நாட்டின் முதல் ராணுவக் கண்காட்சி, சென்னையில், அடுத்த மாதம் நடக்க உள்ளது.இந்நிலையில், ராணுவ தளவாடங்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்வது குறித்த கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும், இரண்டு தொழிற்சாலை வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

உ.பி.,யில், ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி, சித்திரகூட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், ஒரு வழித்தடம் அமைய உள்ளது. தமிழகத்தில், சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சியை இணைக்கும் வகையில், மற்றொரு வழித்தடம் அமைய உள்ளது. ஆயுத உற்பத்தியின் மையமாக, நம் நாட்டை மாற்ற வேண்டும். அதற்கு, இத்துறையில், தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்.

அதற்கேற்ற வகையில், தனியார் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement

இத்துறையில் தற்போது, 37 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆயுதத்தயாரிப்பில், அதிக அளவிலான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு உற்பத்தியை அதிகரிப்பது, இத்துறையை மேம்படுத்துவது போன்றவை குறித்து, ஏற்கனவே, இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும், புதிதாக ஈடுபட ஆர்வமாக உள்ள நிறுவனங்களும், தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.புதிய தொழில் வழிப்பாதை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மார்-201817:32:38 IST Report Abuse

MurugeshSivanBjpOddanchatramராணுவ மந்திரி அவர்களே நீங்கள் எத்தனை நன்மை செய்தாலும் இந்த நன்றி கெட்ட தமிழர்கள் ஓட்டை திராவிஷங்களுக்கு விற்றுவிட்டு மோடி ஒழிக கோசம் மட்டும்தான் போடுவார்கள்

Rate this:
Govind Srinivasan - Worthing,யுனைடெட் கிங்டம்
13-மார்-201821:04:11 IST Report Abuse

Govind Srinivasanஆனால் வெங்கட்ராமனுக்கு பூணுல் அறுத்து தஞ்சாவூரில் அசிங்க படுத்தி மகிழ்ந்தது நமது திருட்டு கழகமும் திருட்டு முட்டாள் கழகமும். வரலாறை மறக்க வேண்டாம், மறைக்கவும் வேண்டாம் நண்பரே

Rate this:
kadhiravan - thiruvaroor,இந்தியா
13-மார்-201820:43:36 IST Report Abuse

kadhiravanஎல்லாம் சரிதான்..,தனியாருக்கு கொடுங்க., வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிக்கொடுங்க.., கடைசீயில கம்பெனி நஷ்டமுன்னு சொல்லிட்டு..,10000 கோடி ரூபாய் ஆட்டயப்போட்டுட்டு அவன் போகட்டும்.,பாஸ்போர்ட்.,விசா எல்லாம் கம்பெனி தொடங்கும் போதே ஏற்பாடுபண்ணி கொடுத்திடுஙங்க..,அவன் போனபிறகு இங்குள்ள ஆதார் கார்டு..,ரேஷன் கார்டு எல்லாம் முடக்கிடலாம்.அவனுடைய சொத்தை பினாமி பேருல மாத்திக்க சொல்லிடலாம்.அப்ப..,அப்ப நமக்கு மட்டும் தேர்தல்நிதி., கட்சிநிதி.,மருத்துவநிதின்னு வந்து சேர்ந்தா போதும்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
13-மார்-201818:30:53 IST Report Abuse

r.sundaramஇந்த மாதிரி சிறு தொழில்கள் ஆரம்பித்து முன்னுக்கு வந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும், நாடு உண்மையில் முன்னேறும்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
13-மார்-201818:28:59 IST Report Abuse

r.sundaramஇந்த ஆண்டின் மிக சிறப்பான ஜோக், திமுக ஆட்சியில் தொழில்கள் நன்றாக இருந்தன என்பது. வியாபாரத்தில் இருந்த கமிசன் என்ற வார்த்தையை அரசியலில் கொண்டுவந்ததே அந்த திருட்டு முட்டாள் கட்சிதான். அந்த கமிஷன் இல்லாமல் இருந்திருந்தால் இன்று தமிழ்நாடு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்தே மதுரையை தலையகமாக கொண்ட பேருந்து நிறுவனத்தை அரசுடமை ஆக்கினார்கள். அந்த பஸ் வரும் நேரத்தை வைத்து கைக்கடிகாரத்தை சரி செய்தவர்கள் ஏராளம். இன்றய அரசு பஸ் நிறுவனங்களின் லட்சணத்தை யாரும் சொல்லி தெரிய வேண்டாம். ஒரே ஒரு குடும்பம் தொழிலில் முன்னேறுகிறது, அந்த தொழிலால் படிக்கும் குழந்தைகள் நாசமாவது தான் உண்மை. என்று சினிமா மாயையில் அறுபத்தி ஏழில் மாட்டிக்கொண்ட தமிழகம் வெளிவருகிறதோ அன்றுதான் தமிழகத்துக்கு விடிவுகாலம்.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-மார்-201815:36:43 IST Report Abuse

Darmavanஇதில் ஒன்று கவனிக்க வேண்டும்...நாட்டின் உண்மையான அக்கறை யாருக்கு என்று...போர் தளவாடங்கள் 70% நாம் இறக்குமதி செய்கிறோம் என்பது செய்தி அதுவும் சிறிய நாடுகளிடமிருந்து என்பது நாட்டுக்கு கேவலம் .ஆனால் காங்கிரஸுக்கு கமிஷன்தான் தேவை....அதுவும் இறக்குமதி செய்தால்தான் அடிக்கமுடியும்....இங்கே தயாரிப்பதனால் கமிஷன் கிடைக்காது...இது இன்றே போதும் இதுநாள்வரை இந்த திருட்டு கும்பல் நாட்டை சுரண்டதான் ஆட்சியில் இருந்தது என்று.

Rate this:
sam - Bangalore,இந்தியா
13-மார்-201820:05:54 IST Report Abuse

samTell me few defenses industries started in India till now (past 3.5 yrs) or in Make in India....

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-மார்-201815:04:05 IST Report Abuse

Kuppuswamykesavanஉலகெங்கும் தனியாரே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கிறார்கள், அங்கேயே லேட்டஸ்ட் டெக் உடனேயே கிடைக்கும்.... ரபேல் நிறுவனமே ரிலையன்ஸை தேர்ந்து எடுத்து உள்ளனர். இதுல இந்திய அரசு எங்க வந்தது. 70 வருடமா தரகு மட்டுமே வாங்குவதற்காக HAL , BHEL , DRDO etc வை மழுங்கடித்து விட்டு, இப்போது உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்க பாஜக செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடுவது காங்கிரஸ் ன் பாக்-தந்திரம்./// - உங்கள் கருத்து, நிச்சயமாக, பிற மக்களை(வாசகர்களை), மிக ஆழ்ந்து யோசிக்க வைக்கும் எனலாம், இந்த, நம் இந்தியாவின், ராணுவ தளவாடங்கள்(லேடஸ்ட் மாடல்கள்) உற்பத்திகள் மற்றும் ஆராய்ச்சிகள் சார்ந்த, தொழிற்ச்சாலைகள் அமைக்கும் விசயங்களில்.

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-மார்-201812:25:29 IST Report Abuse

Loganathan Kuttuvaஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் .... போய் சேரக்கூடாது.

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-மார்-201811:08:41 IST Report Abuse

pradeesh parthasarathyஇந்த தொழிற்சாலைகளை தென் மாவட்டங்கள் பக்கம் திருப்புங்க ...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-மார்-201810:26:27 IST Report Abuse

balakrishnanகேட்பதற்கு இனிமையாக இருக்கு, சொல்வதற்கு அவர்களுக்கு எளிதாக இருக்கு, இவையெல்லாம் நடந்தால் நல்லது தான், ஆனால் எதுவும் நடைபெறப் போவதில்லை, அதைத்தான் நாம் பல விஷயங்களில் பார்த்து வருகிறோம்,

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
13-மார்-201811:06:10 IST Report Abuse

கைப்புள்ளநம்பிக்கை வையுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு அரசாங்கத்துக்கு உதவுங்கள். முந்தைய அரசாங்கம் போல அல்லாமல் நல்லவை செய்ய முயற்சிப்பவர்களை ஊக்கப்படுத்துங்கள். கண்டிப்பாக நல்லது நடக்கும். நிறைய செய்ய முனையும் அரசை தூற்றாமல் இருப்பது கூட நீங்கள் அரசுக்கு செய்யும் உதவியே....

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-மார்-201818:35:45 IST Report Abuse

Darmavanபாலா என்கிற மூர்க்க கும்பலுக்கு குறை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்...

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement