வெளிநாடு தப்பியோடுவோர் சொத்து பறிக்க சட்டத்திருத்தம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வெளிநாடு தப்பியோடுவோர்
சொத்து பறிக்க சட்டத்திருத்தம்

புதுடில்லி : மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, லோக்சபாவில் நேற்று, மத்திய அரசு தாக்கல் செய்தது.

வெளிநாடு தப்பியோடுவோர் சொத்து பறிக்க சட்டத்திருத்தம்


விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்ளிட்ட தொழிலதிபர்கள், வங்கிகளில் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போன்றோரின் சொத்துகளை பறிமுதல் செய்து, நிலுவைத் தொகையை வசூலிக்கும் வகையில், லோக்சபாவில் நேற்று, பொருளாதார குற்றம் இழைத்து தப்பியோடுவோருக்கு எதிரான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.மசோதாவில் கூறப்பட்டு உள்ளதாவது: வங்கிகளில், 100 கோடி ரூபாய் அல்லது கூடுதலாக கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோருக்கு, இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். இத்தகைய மோசடியாளர்கள், வெளிநாட்டில் பதுங்கி இருந்து, இந்தியாவில் நடக்கும் சட்ட நடைமுறைகளில் பங்கேற்காமல் தவிர்ப்பதை தடுக்க, இச்சட்டம் வகை செய்யும்.

வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், வங்கித் துறை கடுமையாக பாதிக்கும்.இதை தடுக்க, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே, புதிய சட்டத்திருத்தம் அவசியமாகிறது.

வங்கிகளில், 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு கூடுதலாக கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடும் மோசடியாளர்களின் சொத்துகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்ய, அதிகாரம் தரப்படும்.

Advertisement

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் மீது, மோசடியாளர்கள் உரிமை கோர முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டத்திருத்தம், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் இருந்து வேறுபடுகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில், குற்றத்தால் கிடைத்த லாபத் தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்படும்.புதிய சட்டத்திருத்தப்படி, குற்றம் செய்ததால் கிடைத்த சொத்து மட்டும் அல்லாமல் மோசடியாளரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மார்-201815:40:49 IST Report Abuse

ArulKrishhahahha....ivargalayum muttalgal ended ninaithuvitargal

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
13-மார்-201815:07:33 IST Report Abuse

kc.ravindranதிட்டம் போட்டு திருடுற கூட்டம் திட்டம் போட்டுக்கொண்டே இருக்குது. அதை தடுக்கிறோம்பாரு என்கிற கூட்டம் கூவி கொண்டே இருக்குது. ஜனங்களா பார்த்து திருந்தாவிட்டால் பின்னாலே காத்தடிச கூட தெரியாது.

Rate this:
kumar - chennai,இந்தியா
13-மார்-201814:14:12 IST Report Abuse

kumarஅவங்கள ஓடவிட்டுட்டு பின்னாடியே நீங்க ஒடுங்க... இங்க ஒருத்தன் ஆயிரம் ரூபா லோன் கட்டலனா அவன்கிட்ட இருந்து .... கூட உருவிடறது.... ஆயிரம் கோடி வாங்கினாங்க அவனை ஓட விட்டு சட்டம் போடறது...நாசமா போக உங்க சட்டம்

Rate this:
GIRIPRABA - chennai,இந்தியா
13-மார்-201813:26:24 IST Report Abuse

GIRIPRABAஇப்படி கடன் வாங்கி ஓடி போகிறவர்கள் நன்றாக வெளியூரில் சுகமாக உள்ளனர். ஆனால் இவர்கள் துவங்கிய தொழிற்சாலையில் பணிபுரிபவர்களின் வேலை பறி போவது பற்றி அரசோ அல்லது கடன் கொடுத்த வங்கியோ கவலை பட போவதில்லை. தொழிற்சாலைகளை காட்டி பல கோடி கடன் வாங்கி அவர்கள் செட்டில் ஆகிவிட்ட நிலையில் கடன் வாங்கியது அவர்களின் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஒன்றும் தெரிய போவதில்லை திடீரென ஒருநாள் NCLT என்ற அமைப்பு ஒரே ஒரு கடிதம் மூலமாக பணியாளர்களை உங்களுக்கு வேலை இல்லை என கூறி நீங்கள் எல்லாம் தொழிற்சாலை உள்ளே வரக்கூடாது என்று முறையிடுகிறது அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகளை பற்றியும் அவர்களின் குடும்பத்தை பற்றியோ NCLT என்ற அமைப்புக்கு எந்தவித கவலையும் இல்லை. இதனால் மனமுடைந்து வயதான பணியாளர்களும். மேலும் பல கூலி தொழிலாளர்களும் என்ன செய்வது இனி எங்கே போய் முறையிடுவது தங்களுடைய நிலுவைத்தொகை வைத்து பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்வது எப்படி என நினைத்து எனக்கு தெரிந்த ஒருவர் இறந்தே விட்டார் இப்போது அந்த குடும்பம் நிர்கதியில் உள்ளது. இந்த பகுதியை உங்களுடைய பத்திரிகையில் இட்டால் இதற்கு ஒரு வழி கிடைக்கும் என நான் ethirparkiren

Rate this:
13-மார்-201820:50:00 IST Report Abuse

RavishankerCsir u r correct thats truths,but here people dont aware about NLCT...

Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
13-மார்-201812:12:18 IST Report Abuse

Ramakrishnan Natesanவரும் முன் காப்போம் என் திட்டங்கள் தொடங்குவார்கள் ... ஓடிய பிறகு திட்டங்கள் போடுகிறார்கள்

Rate this:
Divahar - tirunelveli,இந்தியா
13-மார்-201810:51:08 IST Report Abuse

Divaharநம் நாட்டில் இதுவரைக்கும் இந்தமாதிரி சட்டம் இல்லையா? கொடுமை?

Rate this:
23m Pulikesi - Chennai,இந்தியா
13-மார்-201810:29:25 IST Report Abuse

23m Pulikesiஏதாவது உருப்படியா நடந்தா சரி.

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
13-மார்-201809:54:19 IST Report Abuse

ரத்தினம்உண்மை விளம்பி, இப்போது குறைந்தது சட்டமாவது கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு முன் உள்ள அரசு என்ன செய்த்து? இஷ்டத்துக்கு கடன் கொடுத்தது மட்டும் இல்லாமல் பொறுப்பு இல்லாமல் காங்கிரஸ் இந்த அரசை குறை கூறிக்கொண்டு உள்ளது .

Rate this:
இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து
13-மார்-201817:50:26 IST Report Abuse

இட்லி நேசன்அவுங்க கடன் கொடுத்தாங்க... நீங்க அவங்கள தப்ப விட்டீங்க.. இதுல யார் யோக்கியம்?...கொஞ்சம் விளக்குங்களேன்... அவனுங்ககிட்ட கேட்டா 2007 வரை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முன்னணி நிறுவனம் அதனால கடன் கொடுத்தோம் என்கிறார்கள்.. நீரவ் மோடியும் உங்கள் சாமர்த்தியத்தினால் பிடிபடவில்லை.. அவருக்கு உதவியவர்கள் வேலை ஓய்வுபெற்றதினால் மட்டுமே... உங்க ரெண்டு கட்சியிலயும் எது உருப்படியான கட்சின்னு கண்டுபிடிக்க கடவுள் கிட்டகூட பந்தயம் கட்டலாம்......

Rate this:
rajan - kerala,இந்தியா
13-மார்-201809:53:48 IST Report Abuse

rajanஇந்த சட்டம் எல்லாம் சரிதான் சாமியோவ்,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201808:39:51 IST Report Abuse

Srinivasan Kannaiyaவெளிநாடு தப்பியோடுவோர் சொத்து பறிக்க சட்டத்திருத்தம்.... இதை கொண்டு வருவதற்குள் இருக்கும் ஒன்று இரண்டு ஆட்களும் ஏதோ ஒரு தீவிற்கு குடும்பதோடு சென்றுவிடுவார்கள் . இது அவர்களுக்கு கொடுக்கும் முன்னெச்சரிக்கை போல உள்ளது...

Rate this:
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
13-மார்-201810:43:52 IST Report Abuse

Krishnamoorthi A Nகடனை திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூவுகிறீர்கள். இப்போது அவர்களது சொத்துக்கள் பறிக்க சட்டம் கொண்டுவந்தால் அதற்கும் ஒரு எதிர்ப்பு கருத்து. உம்மைப் போன்றவர்களுக்கு மோடி எதிர்ப்பே பிரதானம். தூக்கத்தில் கூட மோடியை பற்றிய கனவுதான் வருமோ?....

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement