ஜெ., மரண விசாரணை: சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., மரண விசாரணை:
சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை : சசிகலா தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல்செய்ய, அவகாசம் வழங்க, நீதிபதி மறுத்ததைத் தொடர்ந்து, நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

A.D.M.K,Jayalalithaa,Sasikala,அ.தி.மு.க,சசிகலா,ஜெயலலிதா


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷனை, தமிழக அரசு அமைத்தது. 'ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து விபரம் தெரிந்தவர்கள், தங்கள் வாக்குமூலத்தை, 2017 நவம்பர், 22க்குள் தாக்கல் செய்யலாம்' என, விசாரணை கமிஷன் அறிவித்தது.

ஜெ., உடனிருந்த சசிகலா சார்பில், பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதைத் தொடர்ந்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, விசாரணை கமிஷன், டிச., 21ல், சசிகலாவுக்கு, 'சம்மன்' அனுப்பியது.இருந்தும், சசிகலா, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. அவர் சார்பில், அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் ஆவணங்களை வழங்க வேண்டும் என, மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஆவணங்களை வழங்க, நீதிபதிஉத்தரவிட்டார்.

அதன்பிறகும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, ஏழு நாட்கள் அவகாசம் கோரி, மனு தாக்கல் செய்தனர்; அந்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.மேலும், சசிகலாவை சிறையில் சந்தித்து, வாக்குமூலத்தை பதிவு செய்ய நேரிடும் என்றும், அவர் வாக்குமூலம் தாக்கல் செய்யாததால், எதிர்மறையான யூகத்தை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும், நீதிபதி எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று சசிகலா சார்பில், விசாரணை கமிஷனில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர், அரவிந்தன் கூறியதாவது:சசிகலா சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். இதற்கு மேல் விசாரிக்கப்படும் நபர்கள் குறித்து, எங்களுக்கு முன்னதாக தெரிவிக்க கோரி, தனி கடிதம் கொடுத்துள்ளோம்.

பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, அவகாசம் கேட்டோம்; ஆனால், கமிஷன் தரவில்லை. வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன், நான்கு முறை சிறைக்கு சென்று, சசிகலாவை சந்தித்தார்; அவர் கூறியதன் அடிப்படையில், பிரமாண பத்திரம் தயார் செய்யப்பட்டு, கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திரிபாதி திடீர் ஆஜர்!ஜெ., விசாரணை கமிஷனில், நேற்று மதியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தலைவரான, டி.ஜி.பி., திரிபாதி ஆஜரானார். இவர், ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, சட்டம் - ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்தார். 2011 - 12ம் ஆண்டில், சசிகலாவை, ஜெ., வீட்டிலிருந்து வெளியேற்றியபோது, சென்னை போலீஸ் கமிஷனராகவும் இருந்தார்.

அவரிடம், நேற்று நடந்த விசாரணையில், சசிகலாவை, ஜெ., வெளியேற்றிய சம்பவம் தொடர்பாவும், ஜெ., மருத்துவமனையில் சேர்த்தபோது நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும், நீதிபதி கேள்விகள் கேட்டார். அரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.திரிபாதி, வரும், 21ல் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டிருந்தது. நேற்று, ஜெ., உதவியாளர், பூங்குன்றன் ஆஜராகாததால், திரிபாதியை, விசாரணைக்கு வர முடியுமா என, விசாரணை கமிஷன் சார்பில் கேட்கப்பட்டது.

Advertisementஅவரும் சம்மதித்து ஆஜரானதாக, விசாரணை கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.திரிபாதி வரும் தகவலை, விசாரணை கமிஷன் ரகசியமாகவே வைத்திருந்தது. அவர் வந்த பிறகே, பத்திரிகையாளர்களுக்கு விபரம் தெரிந்தது.

பூங்குன்றன் மீது நீதிபதி கோபம்!ஜெ., உதவியாளர்,பூங்குன்றன், ஜன., 9ல் ஆஜரானார். மீண்டும், நேற்று அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்; ஆனால், ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, 'அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆஜராக முடியவில்லை' என, கூறினர். இதனால், நீதிபதி கோபமடைந்தார்.

'விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. ஜெ., வீட்டில் சமையலராக இருந்த, சேகர் ஆஜராகவில்லை. 'தற்போது, இவரும் ஆஜராகவில்லை. பள்ளியில், 'லீவு' கேட்பது போல் கேட்கிறீர்கள். ஆஜராகாமல் வாய்தா வாங்குவதை ஏற்க முடியாது' என, நீதிபதி கோபப்பட்டார்.

அதன்பின், 'முறைப்படி மனு தாக்கல் செய்யுங்கள்' எனக்கூற, வழக்கறிஞர்கள் முறையாக மனு தாக்கல் செய்தனர்.அதை ஏற்ற நீதிபதி, வரும், 22ல் ஆஜராகும்படி, பூங்குன்றனுக்கு உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaishnavi - nainital,இந்தியா
18-ஏப்-201813:42:31 IST Report Abuse

vaishnaviஇந்த சி எம் சும்மா ஆனால் நிழல் சி எம்ஐ நல்ல சீனியர் வக்கீலை வைத்து குறுக்கு விசாரணை செய்து திறம்பட வாதாடினால் உண்மையான குற்றவாளி தானாகவே மாட்டுவர்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-மார்-201817:07:11 IST Report Abuse

Endrum Indian'ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து விபரம் தெரிந்தவர்கள், தங்கள் வாக்குமூலத்தை, 2017 நவம்பர், 22க்குள் தாக்கல் செய்யலாம்' அப்புறம் டிசம்பரில் சமயம் கொடுத்தார்களாம், இன்னைக்கி தான் அதாவது மார்ச் 14 லாந்தேதி தான் தாக்கல் பண்ணிச்சாம் ??? அப்போ சட்டம், ஒழுங்குமுறை என்று ஒன்றுமே இல்லாதவர்கள் தான் இந்த தேசத்தை தான் தான் ஆளத்தகுதியானவர்கள் என்று நினைக்கிறார்களா??? இதற்கு நடவடிக்கை ஏதும் கிடையாது?????இது தான் நமது ஜல்லடை போல ஓட்டைகள் மட்டுமே நிறைந்த இந்திய சட்டம்.

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-மார்-201821:01:25 IST Report Abuse

Devanatha Jagannathanஇவனுக சசியின் கூலி படை அதனால் தான் டிமிக்கி கொடுக்கறாங்க.

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-மார்-201817:40:42 IST Report Abuse

D.Ambujavalliசொத்துக் குவிப்பு வழக்கு 22 வருஷம் என்றால் இந்த விசாரணை 22 மாதமாவது எடுக்க வேண்டாமா ? அதெல்லாம் சசி, ஓபிஎஸ் தரப்பு நன்றாகவே கவனித்துக்கொள்ளும். சரியாக நாடாளுமன்றம், சட்டசபைத் தேர்தல் சமயத்தில் மோடிஜியின் துருப்புச் சீட்டாக ரிசர்வ். செய்து வைத்திருப்பார்

Rate this:
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
13-மார்-201813:25:01 IST Report Abuse

Bala Subramanianகை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

Rate this:
Kalyanaraman S - Bangalore,இந்தியா
13-மார்-201813:04:05 IST Report Abuse

Kalyanaraman S\\அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் ஆவணங்களை வழங்க வேண்டும் என, மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஆவணங்களை வழங்க, நீதிபதிஉத்தரவிட்டார்....\\ இது ஒன்றும் வழக்கு விசாரணை இல்லையே, வாதி, பிரதிவாதி, விசாரணை, குறுக்கு விசாரணை, ஆவணங்கள் மொழிபெயர்த்தல் என்று சொல்வதற்கு. இது ஒரு விசாரணை கமிஷன். இதில் கேள்வி கேட்பது கமிஷன் தலைவர், பதில் சொல்வது கூப்பிடப்பட்டவர்கள். மற்றவர்களுடைய விசாரணை விவரங்களை சசிகலாவுக்கு தர சட்டத்தில் இடமுண்டா? அடுத்ததாக, \\இதற்கு மேல் விசாரிக்கப்படும் நபர்கள் குறித்து, எங்களுக்கு முன்னதாக தெரிவிக்க கோரி, தனி கடிதம் கொடுத்துள்ளோம்....\\அந்த லிஸ்ட் எதுக்காக இவங்களுக்கு கொடுக்கணும்? எல்லாம் ஒரே தமாசா இருக்குதுங்க

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-மார்-201815:40:30 IST Report Abuse

Darmavanஇதை சட்டம் அறிந்தவர்கள் சொன்னால் எல்லோருக்கும் பயன்படும்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-மார்-201819:35:52 IST Report Abuse

Manianஅதற்கு யாரு காசு கொடுப்பார்கள். ஓசியே வாங்கும் வக்கீலு கூட சொல்ல மாட்டாரு, ஏன்னா அவருக்கும் பதில் தேறியது. அறிவாளி வக்கீல் ஆபத்தை விலைக்கு வாங்க மாடடான்....

Rate this:
Malaichaaral - Ooty,இந்தியா
13-மார்-201812:06:21 IST Report Abuse

Malaichaaralகண் துடைப்பு ..

Rate this:
rajan - kerala,இந்தியா
13-மார்-201809:36:17 IST Report Abuse

rajanஓ, இதற்கு மேல் விசாரிக்கப்படும் நபர்கள் குறித்து, எங்களுக்கு முன்னதாக தெரிவிக்க கோரூரங்களாம் சொல்லாதீங்க மைலார்ட். சொன்னீங்கன்னா அவுங்களை எல்லாம் இந்த கூட்டம் போட்டு தள்ளிடும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201809:04:43 IST Report Abuse

Srinivasan Kannaiyaபோயஸ் கார்டன் என்றாலே போங்கு கார்டன்...

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
13-மார்-201806:46:08 IST Report Abuse

Samy Chinnathambiஇதென்ன கதை உடறீங்க.........அந்த பொம்பளைய தூக்கி போட்டு மிதிச்சா உண்மையை எல்லாம் வெளி வந்துடும்...சும்மா பிரம்மா பத்திரம் அந்த பத்திரம்னு கதை உடறீங்க....சும்மா வண்டியில போற பொம்பளையை எல்லாம் மிதிச்சி தள்ளிவிட்டு கொல்லுறீங்க...ஒரு குற்றவாளியை உதைச்சா என்ன தப்பு? ஏன்யா நாங்க எல்லாம் சும்மா ஒரு சினிமாவுக்கு போயிட்டு ராத்திரியில வந்தா மிரட்டறீங்க, குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேக்குறீங்க...ஐடி கார்டு காட்ட சொல்றீங்க.....அசிங்கமா திட்டறீங்க என்னமோ உங்க அப்பன் வீட்டு காசுல சினிமாவுக்கு போயிட்டு வந்தா மாதிரி ......

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement