கட்சி துவங்கும் முன் பூசல் : தினகரன் சொல்வது என்ன? | Dinamalar

கட்சி துவங்கும் முன் பூசல் : தினகரன் சொல்வது என்ன?

Added : மார் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: ''மேலுாரில் நடக்கும் கட்சி அறிவிப்பு விழா தொடர்பாக, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி குறித்து, பெரும்பாலானோரை அழைக்காததால், யாரும் அதிருப்தியடையவில்லை,'' என, தினகரன் கூறியதன் மூலம், புதிய கட்சி துவங்கும் முன்பே, ஆதரவாளர்களிடம் பூசல் ஏற்பட்டுள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, சசிகலா, கர்நாடகா மாநிலம்,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக, அவரது உறவினர், தினகரன், நேற்று வந்திருந்தார். இளவரசியை சந்திக்க, அவரது மகன், விவேக் மற்றும் வக்கீல்கள் வந்திருந்தனர்.சிறையில், சசிகலாவை சந்தித்த தினகரன், சொத்து பிரச்னை, புதிதாக துவங்கவுள்ள கட்சி உட்பட பல விஷயங்கள் குறித்து, விளக்கி கூறியுள்ளார்.இதன்பின், செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:தனிக்கட்சி துவங்குவதற்காக, சசிகலாவிடம் ஆசிர்வாதம் பெற்றேன். டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு குறித்த தீர்ப்பு வரும் வரை, உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, தனி அணியாக செயல்பட பெயர் கேட்டோம்.தனிக்கட்சிக்கு துவங்குவதற்கு, என் ஆதரவாளர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலுாரில் நடக்கும் கட்சி அறிவிப்பு விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி குறித்து, 10ம் தேதி இரவு முடிவு செய்ததால், பெரும்பாலானோருக்கு அழைப்பு விடப்படவில்லை; இதனால், யாரும் அதிருப்தியடையவில்லை.கட்சி பெயர் அறிவிப்பு விழாவில், முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே மேடையில் இருக்கை போடப்படும். கர்நாடக சிறைத்துறை விதிப்படி, சாதாரண தண்டனை கைதி, சாதாரண ஆடை அணியலாம் என்பதால், சசிகலா அணிந்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201809:13:45 IST Report Abuse
Srinivasan Kannaiya முறைகேடுகளுக்காக வழக்குகள் இருந்தால் கட்சி ஆரம்பிக்க வேண்டும் போல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை