தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: கமல் குற்றச்சாட்டு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
:கமல் குற்றச்சாட்டு

கோவை : ''தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் தெரிவித்தார்.

வனப்பகுதியில் அஜாக்கிரதையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பீடி, மதுபாட்டில்களை வீசுவது, வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் ஆபத்தாக முடிகிறது.


கோவையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது: குரங்கணி காட்டுத் தீ விபத்து, யாரும் எதிர்பாராதது. அரசு, உரிய நடவடிக்கை எடுத்து உள்ளது. விமர்சிப்பது சரியானது அல்ல. காணாமல் போனவர்களை, கண்டுபிடிப்பர் என, நம்புகிறேன்.

தற்போது நிகழ்ந்த விபத்தை, ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள்,

வனப்பகுதியில் அஜாக்கிரதையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பீடி, மதுபாட்டில்களை வீசுவது, வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் ஆபத்தாக முடிகிறது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை. விபத்துக்கும், குற்றங்களுக்கும் தொடர்பில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தீர்வு கிடைக்கவேண்டும்.

விவசாயிகளுக்கும், தமிழர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள், தண்ணீரை சேகரிக்கவேண்டும்; சேமிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., தவறான முடிவு எனச் சொல்லவில்லை; செயல்படுத்தப்பட்ட முறை தான் சரியில்லை.நல்ல திட்டங்களை வேண்டாம் என்பதை விட, எப்படி அமல்படுத்த வேண்டும் எனக் கூற, பல அறிஞர்கள் இருக்கின்றனர். அதை செவிமடுத்தால்போதும்.

இரு நாட்கள் சுற்றுப்பயணத்தில், நான் மகிழ்ந்து போனேன் என்பதை விட, என் மீது இவ்வளவுபாசமா என, நெகிழ்ந்து போனேன் என்பது தான் உண்மை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisementமுதல்வருக்கு பதிலளிக்க மறுப்பு

சென்னை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: மத்திய, பா.ஜ., அரசை, நான் விமர்சிக்காமல் இல்லை; அவசியம் வரும்போது விமர்சிப்பேன். விமர்சனம் என்பது, ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். எனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தான், அரசியலுக்கு வந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். அதற்கு, நான் பதிலளிக்க விரும்பவில்லை; மக்கள் பதில் சொல்வர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilselvan - chennai,இந்தியா
14-மார்-201818:07:47 IST Report Abuse

tamilselvanகோவை : ''தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் தெரிவித்தார். கமல் அவர்கள் முதல் உங்களை வாழவைத்த சினிமாவில் உலகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது முதலில் அதை சரி செய்ங்கள் அதற்கும் தமிழ் நாடு வாங்கள்

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-மார்-201811:05:06 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)நேத்து கருப்பு சட்டத்தை போட்டுக்கிட்டு கிஸ்தி (GST ) மோசம் ன்னு சொன்னாரு இன்னிக்கு வெள்ளையும் சொள்ளையுமா வந்து , கிஸ்தி (GST ) மோசம் இல்ல இத செயல் படுத்துறதுல தான் சரி இல்லன்னு சமாளிக்கிறார் . இது வேற வாய் அது நார.இவர் சொல்லுற எல்லா கருத்தையும் மாத்தி மாத்தி சொல்லுவாரு . இவர்க்கு இமயமலை அய்யா செய்வது சரியோன்னு தோணுது . உதறிவிட்டு மாறுவதைக் காட்டிலும் உலராமல் இருப்பது நன்று.

Rate this:
ram - chennai,இந்தியா
13-மார்-201818:15:07 IST Report Abuse

ram'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு இப்போது பரவாயில்லை கமல் சார்.. நீங்க வந்தா என்ன ஆக போகுதோ...???

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
13-மார்-201817:49:38 IST Report Abuse

Sundaramதமிழகத்தில் சட்டம் ,ஒழுங்கு நிலையாக உள்ளது

Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-மார்-201816:02:09 IST Report Abuse

Parthasarathy Badrinarayananகிறிஸ்தவ அடிமையாக அருமையாக வேலைபார்க்கும் கமலுக்கு கூடிய சீக்கிரம் மக்கள் செருப்படி கொடுப்பாரகள்

Rate this:
Kumar - Chennai,இந்தியா
13-மார்-201820:40:00 IST Report Abuse

Kumarஅறிவற்ற கருத்து. கருத்தைவிட வெறி தான் தெரிகிறது. கேள்வி கேட்க நாதியற்ற அப்பாவி கிறிஸ்தவர்களையும் அவர்களது செபக்கூடங்களையும் தாக்கி சேதப்படுத்துவதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தாலும் சட்டம் ஒழுங்கு சரிபடுத்தப்பட வேண்டும் என்பதே உண்மை....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-மார்-201814:42:38 IST Report Abuse

இந்தியன் kumarவரும் தேர்தலில் ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் முடிவு கட்டுவோம் புதியவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் , எல்லோரையும் எதாவது ஒரு காரணம் சொல்லி ஒதுக்க வேண்டாம் . திமுக அதிமுகவின் ஊழல் பேர்வழிகள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டனர்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-மார்-201814:40:18 IST Report Abuse

இந்தியன் kumarஇந்த ஆட்சி குமாரசாமியின் தவறான தீர்ப்பால் வந்த ஆட்சி , இதை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து லோக்சபாத்தேர்தலுடன் தேர்தல் நடத்த வேண்டும். குமாரசாமி மட்டும் ஒழுங்கான தீர்ப்பு கொடுத்திருந்தால் எடப்பாடியெல்லாம் இந்த பதவிக்கு வந்திருக்கவேய முடியாது இது தான் அதிஷ்டம் என்பது இனிமேல் இவர்கள் கனவில் கூட ஜெயிக்க முடியாது.

Rate this:
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
13-மார்-201813:24:07 IST Report Abuse

Dhanraj Jayachandrenகமல் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஒரே பல்லவியை பல இடங்களில் அதே வார்த்தையை சொல்லி கருது தெரிவிக்கின்ற்னனர். எனக்கு ஒரு சந்தேகம்.. இவர்கள் எதோ ஒரு கட்சியின் தகவல் துறை ஆட்களாகத்தான் இருக்க வேண்டும்..

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-மார்-201812:46:10 IST Report Abuse

Nallavan Nallavanஅட ..... திடீர் -ன்னு அப்சர்வ் பண்ணி சொல்லிட்டாரே ??

Rate this:
Anand - chennai,இந்தியா
13-மார்-201811:54:14 IST Report Abuse

Anandஎங்கேயோ இவரை செமயா மொத்து மொத்துனு மொத்தியிருக்கிறார்கள். வடிவேலு பாணியில் பேசுகிறார்.

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement