மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும்: ஸ்டாலின்

Added : மார் 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும்: ஸ்டாலின்

சென்னை : 'குரங்கணி காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு, உரிய சிகிச்சைகள் வழங்கி, மீட்புப் பணிகளை, அரசு முடுக்கிவிட வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தேனி மாவட்டம், குரங்கணி காட்டில், மலையேற்றத்திற்காக சென்ற, 36 பேரில், ஒன்பது பேர், காட்டுத் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர். அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும்,உறவினர்களுக்கும், என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும், பலர் மீட்கப்படாமல் இருப்பதும், மிகுந்த கவலை அளிக்கிறது.மத்திய - மாநில அரசுகளுடன், மலைவாழ் மக்களும், அங்கு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம், தீக்காயத்திற்கு உள்ளாகி, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில், முழுமையான குணம் பெற்று, வீடு திரும்ப தேவையான, உயர்தர சிகிச்சையை, அரசு அளிக்க வேண்டும். இனி வரும் காலங்களில், மலையேற்றத்திற்கு, குரங்கணி காட்டுப் பகுதிக்கு செல்வோரின் பாதுகாப்பிற்கு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எடுக்க வேண்டும். இன்னும், மீட்கப்பட வேண்டியவர்களை உடனே, பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
13-மார்-201812:43:30 IST Report Abuse
sridhar எவ்வளவு பெரிய இயக்கம் திமுக. இப்படி சவசவ அறிக்கை விடுவதற்கு பதிலாக தொண்டர்களை இறக்கி உதவி செய்யலாம் அல்லவா. அதெற்கெல்லாம் rss தான் சரி.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-மார்-201809:59:08 IST Report Abuse
rajan சுடலை நீ என்ன சொல்லவாறே. இந்த மாதிரி காட்டுக்குள்ளே போக்குறப்ப முன்னெச்சரிக்கையா பயர் என்ஜினை முன்னாலே வுட்டு பின்னாடியே நடந்து போவணும்னு சொல்லுறியோ. சரிதான் பகுத்தறிவாச்சே இப்படி தான் சொல்லும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201809:10:41 IST Report Abuse
Srinivasan Kannaiya பத்து உயிர்களை பலிகொண்ட பின்பு ஞானயோதமா
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-மார்-201805:12:11 IST Report Abuse
Sanny எதுக்கு உங்க இளைஞர் அணி உங்ககிட்ட இருக்கு, இளையராஜா தமிழக வெள்ளம் வந்தபோது தானாக உதவினார், தளபதியே கட்டளை இடுங்க உங்க அணிக்கு,
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-மார்-201804:07:28 IST Report Abuse
Kasimani Baskaran யாரது உத்தரவுக்கு காத்திராமல் RSS சேவகர்கள் வேகமாக செயல்பட்டு மீட்ப்புப்பணிகளை செவ்வனே செய்தார்கள்... .. கேரள கம்முனிச ஊடகங்கள் உண்மையை தயங்காமல் சொல்லின...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை