ஊட்டி பூங்காவில், 'செல்பி ஸ்பாட்' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி பூங்காவில், 'செல்பி ஸ்பாட்'

Added : மார் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஊட்டி பூங்காவில், 'செல்பி ஸ்பாட்'

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர்களுடன் சுற்றுலா பயணியர் புகைப்படம் எடுக்க வசதியாக, 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டு உள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, ஆண்டுதோறும் மே மாதத்தில், தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 122வது மலர் கண்காட்சி, மே, 18ல் துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.இதற்காக, ஐந்து லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 200 வகையான விதைகள், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளில் இருந்து பெறப்பட்டு, வண்ண மலர் செடிகள் வளர்க்கப்படுகின்றன.மலர்கள் அருகே நின்று, சுற்றுலா பயணியர் புகைப்படம் எடுத்து மகிழும் வகையில், பூங்கா வளாகத்தில், மலர் தொட்டிகளை அடுக்கி வைத்து, 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டு உள்ளது. அதனருகே நின்று, 'செல்பி' எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை