குரங்கணி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரங்கணி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Kurangani fire accident, trekking training,Theni Forest Fire, குரங்கணி தீ விபத்து, மலையேற்றப் பயிற்சி, சுற்றுலா பயணியர், குரங்கணி காட்டுப் பகுதி, சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், வனவர் ஜெய்சிங் சஸ்பெண்ட், 
 picnic, kurangani forest area, health secretary Radhakrishnan,  jaisingh suspended,

மதுரை: குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டை சேர்ந்த இளம்பெண், சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே, குரங்கணி காட்டுப் பகுதியில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணியர், காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில், ஆறு பெண்கள் உட்பட 10 பேர், பலியாயினர். 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.


சஸ்பெண்ட்:

மதுரை அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறிய பின்னர் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 3 பேருக்கு 40 சதவீதத்திற்கு குறைவான காயம் ஏற்பட்டது. 13 பேருக்கு 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 பேர் கொண்ட மருத்துவ குழு செயல்படுகிறது. 74 நர்சுகள் சிகிச்சை பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களை கண்காணிக்க தவறியதாக வனவர் ஜெய்சிங் என்பவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
13-மார்-201814:11:47 IST Report Abuse
Sutha தீ கொளுத்தியவனைக் கண்டு பிடிக்க முடியாதுதான்.அதற்காக வனவரை சஸ்பெண்ட் பண்ணுவது எதற்க்காக.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-மார்-201813:21:34 IST Report Abuse
Pasupathi Subbian ஆள் ஒன்றுக்கு 200 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு , அவர்களை அனுமதித்தது பெரும் குற்றம். அதிலும் ஏற்கனவே தீவிபத்து ஏற்பட்டு கொண்டு இருக்கும் பகுதிக்குள் பொதுமக்களை அனுமதித்தது , இப்போது பல உயிர்கள் இழப்புக்கு காரணமாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X