ஆதார் எண் இணைப்பு காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு| Dinamalar

ஆதார் எண் இணைப்பு காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு

Added : மார் 13, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆதார் எண், காலக்கெடு, சுப்ரீம் கோர்ட், aadhar,

புதுடில்லி: வங்கி கணக்கு, மொபைல் போன் எண் ஆகியவற்றை ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

'மொபைல் போன் எண், வங்கி கணக்கு போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் குறிப்பிடுவது கட்டாயம்' என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, மொபைல் போன், வங்கி கணக்கு மற்றும் பல்வேறு சமூக நல திட்டங்களை பெறுவதற்கான கடைசி நாள் 2018 மார்ச் 31 ம் தேதி என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மொபைல் போன் , வங்கி கணக்கு மற்றும் சமூகநல திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஆதார் வழக்கின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்ணை கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201808:03:56 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதாவது ஒரு நீதிமன்றம் ஆதார் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவை இல்லை... உடனடி தேவை குடிக்க கட்டணம் இல்லாநல்ல குடிநீர்.. கட்டணம் இல்லா கழிப்பறை தேவை என்று சொல்லுகிறதா...?
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201805:47:19 IST Report Abuse
ஆப்பு முதல்லே இந்தத் தகவல் சரியான்னு சொல்லுங்க... பொறவு இந்தத் தகவலை HDFC வங்கிக் காரங்க காதுல போடுங்க... அவிங்க டார்ச்சர் தாங்க முடியலே... உங்க ஆதார் நம்பரை வங்கி கணக்குடன் இணையுங்கன்னு தினமும் இமெயில்லெ தகவல் அனுப்பி சாவடிக்குறாங்க... நம்ன அரசாங்கம் விவரம் இல்லாம இதுமாதிரி டுபாக்கூர் ஆணைகளை வெளியிடுவதும், சுப்ரீம் கோர்ட் அதை நிறுத்தி வைப்பதும், நீரவ் , லலித் போன்ற மஸ்தான்கள் ஆயிரம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடுவதும்....500, ஆயிரம் ரூவா கணக்கில் வெச்சிருக்கும் பொதுமக்கள் டார்ச்சர் செய்யப் படுவதும்...
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
14-மார்-201801:01:02 IST Report Abuse
Narayanan Sklaxmi ஆதார் என்னை கிராஸ் வெரிஃபிகேஷன் சேய்ய ஒரு முறை ஏற்படுத்தி டெலிபோன் நம்பர் டிரேக்டரி போல் ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் பெயர் உள்ளவர்கள் ஆதார் என்னை இணைத்துவிட்டார்களா ஆமாம் / இல்லை என்று கண்டுபிடிக்க செய்தால் நல்லது அதன்மூலம் பொதுமக்கள் உண்மையான அரசியல் வாதிகளை கண்டுபிடிக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X