சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: தலைவர்கள் இரங்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: தலைவர்கள் இரங்கல்

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018
Advertisement
Sukma, presidentofIndia, OfficeofRG, Rajnathsingh, சிஆர்பிஎப், வீரர்கள்,தாக்குதல், ஜனாதிபதி, ராம்நாத், ராகுல், காங்கிரஸ், உள்துறை அமைச்சகம், ராகுல்

புதுடில்லி: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் வேதனையளிக்கிறது. நம்மை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் உயிரிழப்பிற்கு தேசம் போற்றுகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்போம்.காங்கிரஸ் தலைவர் ராகுல்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நடந்த நக்சல் தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது சோகமான சம்பவம். அரசின் தவறான கொள்கையால் உள்நாட்டு பாதுகாப்பு மோசமடைந்துள்ளதை இது காட்டுகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.


உள்துறை அமைச்சர் ராஜ்நாத்: சுக்மா சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக சிஆர்பிஎப் இயக்குநருடன் ஆலோசனை நடத்தினேன். அவரை உடனடியாக சத்தீஸ்கர் செல்லுமாறு கூறியுள்ளேன்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை