சிதம்பரம் மகனின் சொத்து முடக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
சிதம்பரம் மகனின்
சொத்து முடக்கம்

புதுடில்லி : ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த மோசடி தொடர்பான வழக்கில், கார்த்திக்கு சொந்தமான, அட்வான்டேஜ் ஸ்ட்ராட்ட ஜிஸ் நிறுவனத்தின், 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

Karthi Chidambaram,Aircel Maxis , INX Media,ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த மோசடி, சிதம்பரம் மகன் கார்த்தி, அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிஸ் ,  சி.பி.ஐ மோசடி வழக்கு, ஐ.என்.எக்ஸ் மீடியா, திகார் சிறை,  நீதிபதி இந்தர்மீத் கவுர் ,
Aircel - Maxis contract fraud, Chidambaram son Karthi, Advantage Strategis,
CBI fraud case, Tihar jail, Judge Inderde Kaur,

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, சி.பி.ஐ., மோசடி வழக்கை, தொடர்ந்து உள்ளது. ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார், 'டிவி' வெளிநாட்டில் இருந்து முதலீடு பெறுவதற்கு அனுமதி அளித்ததில், மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், கார்த்தி மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தியை, 13 நாட்கள், டில்லியில் உள்ள

திகார் சிறையில் அடைக்க, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இதற்கிடையே, ஜாமின் கோரி, கார்த்தி தாக்கல் செய்த மனு, ஏற்கனவே, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால், அதை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும், நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், ஜாமின் கோரி, நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, பெண் நீதிபதி, இந்தர்மீத் கவுர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதி, இந்தர்மீத் கவுர் குறிப்பிட்டார். ஆனால், அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, இந்த ஜாமின் மனு, வேறொரு அமர்வுக்கு மாற்றப்படும்.

இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கில், 20ம் தேதி வரை, கார்த்தியை கைது செய்வதற்கு,

Advertisement

டில்லி உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டிருந்த, கார்த்தியின் ஆடிட்டரான, பாஸ்கர ராமனுக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், நேற்று நிபந்தனை ஜாமின் அளித்தது.இந்த சூழ்நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த மோசடி தொடர்பான வழக்கில், கார்த்திக்கு சொந்தமான, 'அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிஸ்' நிறுவனத்தின், 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதை அமலாக்கத் துறை உறுதி செய்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
15-மார்-201809:06:55 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>மீதி என்னாச்சு அரசாங்கமே ஏவாளுக்கு போச்சு பல லக்ஷமகோடீ என்று சொல்லப்பட்டதே பத்துலக்ஷமகோடீலே என்று நம்மளையே நாம் கொள்ளை அடிச்சு பெற்றோம் சுதந்திரம் அதுவும் அந்தஇட்டாலிகாரி தலைமை சூப்பர்ப் நல்லாடைஷ்ஷியே , அடுத்து தமிழகக்கொள்ளைக்கு வாரான் அடுத்த கள்ளர்கூட்ட தினகரன் அண்ட் கூட்டம்

Rate this:
s t rajan - chennai,இந்தியா
14-மார்-201819:31:11 IST Report Abuse

s t rajanகடலில் கரைத்த புளி மக்கள் இளிச்சவாயர்கள். இன்னிக்கு மாறன் த்யாகி ஆயிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாட்களில், சிதம்பரமும் ஆயிடுவாரு. அப்புறம் எல்லோரும் சேர்ந்து தொழிலைத் தொடர வேண்டியது தான். பூகம்பம் வந்து இந்த அரசியல்வதிகளைத் தண்டித்தால் தான் உண்டு.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-மார்-201816:38:01 IST Report Abuse

Endrum Indian, 1 .16 கோடி சொத்து முடக்கமாம் அவனிடம் இருப்பது 1 .16 லட்சம் கோடி, அதை முடக்கிப்பார்????

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X