தீர்ப்பு வரும் வரை அரசு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை! Dinamalar
பதிவு செய்த நாள் :
கட்டாயமில்லை!
தீர்ப்பு வரும் வரை அரசு திட்டங்களுக்கு ஆதார்...
 அரசியல் சாசன அமர்வு பிறப்பித்தது அதிரடி உத்தரவு

புதுடில்லி : வங்கிக் கணக்குகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், இறுதி தீர்ப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனால், மானியங்கள், பலன்கள் கிடைக்கும் திட்டங்கள் தவிர்த்து, மற்றவற்றுடன் ஆதாரை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Aadhaar No, Supreme Court,Attorney General KK Venugopal,ஆதார் எண், சுப்ரீம் கோர்ட்,  வங்கிக் கணக்கு,   நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கறிஞர் விருந்தா குரோவரின் பாஸ்போர்ட், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள், ஆதார் கட்டாயமில்லை, உச்ச நீதிமன்றம்,
 Bank Account, Justice Deepak Mishra, Passport of Attorney Vrinda Grover, Social Security Project Benefits, Aadhaar not mandatory,சமையல், 'காஸ்' மானியம் பெற, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக உள்ளது.

பல வழக்குகள்


மேலும், 'வங்கி கணக்குகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றுடன், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு கூறி வருகிறது. 'மொபைல் போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்' என, மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூறிவருகின்றன.

'இம்மாதம், 31க்குள், இந்த சேவைகளை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்' என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அரசு திட்டங்கள், வங்கி கணக்குகள், மொபைல் போன் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்கும்படி கட்டாயப்படுத்துவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

'ஆதாரை இணைக்க சொல்வது சட்டப்படி செல்லுபடி ஆகுமா' என்ற கேள்வியை, மனுதாரர்கள் முன்வைத்துள்ளனர். இந்த வழக்குகளை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எம்.எம்.கன்வில்கர், சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விருந்தா குரோவர், தத்கல் திட்டத்தில், பாஸ்போர்ட் வாங்கு வதற்கும், ஆதாரை கட்டாயமாக்கி புதிய விதி அமல்படுத்தப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பாஸ்போர்ட் ரத்து


மூத்த வழக்கறிஞர், அரவிந்த் டி.பதார் வாதிடுகையில், ''வழக்கறிஞர் விருந்தா குரோவரின் பாஸ்போர்ட், 2020 வரை செல்லத்தக்கது. ஆனால், கூடுதல் புத்தகம் இல்லாததால், அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. ''வங்கதேசத்தில் ஒரு மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாஸ்போர்ட் பெற, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றபோது, ஆதார் அட்டை இல்லாததால், அவருக்கு பாஸ்போர்ட் தரப்படவில்லை,'' என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள், சேவைகள், மானியங்கள் பெற, ஆதார் அவசியமாக்கப்பட வேண்டும்,'' என்றார்.

இறுதி தீர்ப்பு


பல தரப்பு வாதங்களுக்கு பின், உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு: வங்கி கணக்குகள், மொபைல் போன், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பது, நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை, கட்டாயம் கிடையாது.

Advertisementமானியங்கள், பயன்கள் கிடைக்கும் திட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மொபைல் போன் சந்தாதாரர்கள், ஆதார் எண் அளித்தல், இ - கே.ஒய்.சி., எனப்படும், மின்னணு வியல் முறையில், வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை அளித்தல் ஆகியவற்றுக்கான அவகாசம், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது.

தத்கல் திட்டத்தின் கீழ், பாஸ்போர்ட் பெற, ஆதார் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள், இறுதி தீர்ப்பு வரும் வரை பொருந்தாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

'6 திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி'

இந்த வழக்கில், மனுதாரர்கள், புட்டாசாமி உள்ளிட்டோர் வாதிடுகையில், 'அரசியல் சாசன அமர்வு, முந்தைய உத்தரவுகளில் கூறியபடி, மத்திய, மாநில அரசுகளின், ஆறு திட்டங்களுக்கு மட்டுமே, ஆதார் அட்டைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 'நீதிமன்ற உத்தரவுகளை, மத்திய அரசு கண்டிப்பாக பின்பற்றும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே, ஆதார் எண் தரலாம் என, உத்தரவிட வேண்டும்' என்றனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
14-மார்-201821:22:48 IST Report Abuse

Naduvarமக்களை பார்த்தால் உங்களுக்கு எப்புடி இருக்கிறது ??? எதையும் நன்கு யோசித்து முடிவு செய்ய மாட்டிர்களா ??? இந்தியா உருப்பட போவதே இல்லை

Rate this:
14-மார்-201817:10:58 IST Report Abuse

நாஞ்சில் நாடன் நாடன்கட்டாயம் என்பது சாமானியருக்குத்தான். கட்டாயம் இல்லையென்றால் ஏன் காஸ், மொபைல், பேங்க் என தொடர்ந்து ஆதாரை இணைக்க சொல்லி அதை 98% மக்களும் செய்து முடித்து விட்டார்கள். ஆனால் கட்டாயம் இல்லையென்பது பெரும் முதலைகளுக்கு ஏற்கனவே முதலிலே தெரிந்தது. அதனால் அவர்களும் இணைக்கவில்லை இனியும் இணைக்க மாட்டார்கள். அதனால் அவர்களை ஓன்றும் செய்ய இயலாது. இதை எதிர்த்து சாமானியன் கேட்க முடியாது. கேட்டால் உன்னை யாரு இணைக்க சொன்னார்கள் என்று சட்டம் பேசுவார்கள். ஏமாந்தது என்னவோ நாம்தான். எல்லாம் சாமானியர்களை கண்காணிக்க நடத்தும் நாடகம்தான். சட்டம் என்பது சாமானியர்களுக்குத்தானே.

Rate this:
spr - chennai,இந்தியா
14-மார்-201813:09:05 IST Report Abuse

sprஇது ஒரு நாடகம் இவர்கள் இறுதி தீர்ப்பு தருவதற்குள், மத்திய அரசின் கட்டாயத்தால் அரசின் அனைத்து சேவைகளும் ஆதாய இணைக்கச் சொல்லி மக்களை பலவகையிலும் வற்புறுத்தி, அதனை நிறைவேற்றுவார்கள். அம்பானி போன்றோருக்கு "தகவல் பணம்" அதிலும் "தனிநபர் தகவல் அதிகமான பணம்" எனவே அவர்களும் மக்களை கட்டாயப்படுத்தி ஆதாரை எல்லாவற்றுக்கும் அத்தியாவசியம் என்று ஆக்கிய பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால் என்ன செல்லாவிட்டால் என்ன? மக்களை மடையர்களாக்கி விட்டார்கள் விவேகமற்ற வகையில், முரட்டுத்தனமாக அமுல்படுத்திய பண மதிப்பிழப்பு செயலால் இப்பொழுது கறுப்புப் பணம் அதிகமாக உருவாகி விட்டதாக சொல்லப்படுகிறது கருப்புப்பண முதலைகள் "நம்பிக்கை/ தவறினால் உயிர்பறிப்பு" என்றார் வகையில் பல பரிவர்த்தனைகளை வங்கிகளுக்குச் செல்லாமலே நடத்துவதாலேயே பல முக்கியப்புள்ளிகள் கொலை செய்யப்பட்ட்டதாக காவற்துறையை சார்ந்தவர்களே சொல்கிறார்கள் என ஊடகங்கள் வெளியிட்டன. கைபேசி இணைப்பு கட்டாயமாக்கப்பட்டவுடன், மக்களின் மானியங்கள் கண்டகண்ட வங்கிகளுக்குச் செல்கின்றன குழப்பம் அதிகம் எனவே இது முரட்டுத்தனமாக செயல்படும் மத்திய அரசினை கட்டுப்படுத்த இயலாத நீதிமன்றங்களும் தங்களின் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒரு நாடகம் நடத்துகிறது

Rate this:
christ - chennai,இந்தியா
14-மார்-201811:20:23 IST Report Abuse

christஎன்னய்யா இது ஆதாரை வைத்துகொன்டு இப்படி மக்களை வாட்டுரிங்க ? ஒரு வாட்டி கட்டாயம் என சொல்றிங்க ? ஒருவாட்டி வேணாம் என சொல்றிங்க ?

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-மார்-201810:29:24 IST Report Abuse

Agni Shivaஆதார் மூலம் பல்வேறு முறை கேடுகள் களையப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு சேரவேண்டிய திட்டங்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் அவர்களுக்கு சென்றடைவதை ஆதார் உறுதி செய்திருக்கிறது. வரி ஏய்ப்பு செய்பவர்களை அதை காண்பித்து கொடுத்து இருக்கிறது. கள்ளப்பண பதுக்கலை அது காண்பித்து கொடுத்திருக்கிறது. பினாமி சொத்துக்களை காண்பித்து கொடுத்து இருக்கிறது. பயங்கரவாதிகளை காண்பித்து கொடுத்திருக்கிறது. ஆனால் ஒருவனுக்கு பாஸ்போர்ட் கிடைவில்லையாதால் இதை அனைத்தையும் ரத்து செய்து இருக்கிறது கோர்ட். அங்கு இருப்பவர்கள் மனிதர்கள் தானா அல்லது...?

Rate this:
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
14-மார்-201813:55:12 IST Report Abuse

Selvaraj Thiroomal/////''வழக்கறிஞர் விருந்தா குரோவரின் பாஸ்போர்ட், 2020 வரை செல்லத்தக்கது. ஆனால், கூடுதல் புத்தகம் இல்லாததால், அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.////// இத்தனை வருடம் பாஸ்போர்ட் செல்லப்படியாகும் நிலையில் வைத்திருந்த ஆளுக்கு,, ஆதார் அட்டை இல்லாவிட்டால் பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுப்பவர்கள் மனிதர்கள்தானா அல்லது இயந்திரங்களா ??...

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
14-மார்-201809:30:43 IST Report Abuse

N.Kaliraj நீங்க இப்படி சொல்றிங்க...ஆனா ஆம்பூர் ஸ்டேட் பேங்கில் சேமிப்பு கணக்கோட ஆதார் இணைக்கவில்லை என கூலித் தொழிலாளர்களின் கணக்கை முடக்கிவிட்டார்கள்...பணம் எடுக்க ஆதாருடன் பேங்க் வாசலில் மக்கள் அலைகிறார்களே....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-மார்-201808:31:09 IST Report Abuse

balakrishnanஅரசு குழப்புகிறது என்றால் நீதிமன்றங்களும் தங்கள் பங்குக்கு குழப்பங்களை செய்து வருகிறது, ஒரு பொது அடையாளம் அறிமுகப்படுத்தும் போது சிறிது காலக்கெடு கொடுத்து கண்டிப்பாக நிறைவேற்றவேண்டும், ஒரு நேரம் அனைத்திற்கும் ஆதார் அவசியம் என்று ஒரு உத்தரவு வருகிறது, பிறகு வேண்டாம் என்று இன்னொரு உத்தரவு, கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களை பாடாய் படுத்துகிறது மத்திய அரசு

Rate this:
yila - Nellai,இந்தியா
14-மார்-201812:17:55 IST Report Abuse

yilaகவலை படாதீங்க.. கமிஷன் கிடைக்கும்னா நம்ம அரசியல்வாதிகள் நீதி மன்ற உத்தரவுகளை எல்லாம் கண்டுக்கிடவே மாட்டாய்ங்க. கட்டாயம்தான்.......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201808:24:55 IST Report Abuse

Srinivasan Kannaiyaவர வர ஆதார் விவகாரம் கண்ணும் காதும் புளித்து விட்டது... நாட்டிற்கு அத்தாவசியமாக அவசரமாக உடனடியாக எது தேவையோ அதை செய்யுங்கள்..

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மார்-201806:55:37 IST Report Abuse

ஆரூர் ரங்தனிநபர் உரிமை நாட்டின் இறையாண்மையை விட முக்கியம் எனக் கருதினால் கோர்ட்டே வேண்டாம் இன்னும் சில பத்தாண்டுகள் நாட்டுக்காகவே நாம் என்ற நினைவு இருந்தால்தான் முன்னேறவாய்ப்பு

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-மார்-201803:30:12 IST Report Abuse

Kasimani Baskaranநீதித்துறை அதன் வேலையை காட்ட ஆரம்பித்து இருக்கிறது... அரசின் செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுவது என்பது இதுதான்...

Rate this:
yila - Nellai,இந்தியா
14-மார்-201812:19:27 IST Report Abuse

yilaமுக்காலம் முங்கி குளிச்சாலும் காகம் கொக்காகுமா?...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement