'மாஜி' நடிகை ஜெயா பச்சனுக்கு 1,000 கோடி ரூபாய் சொத்து Dinamalar
பதிவு செய்த நாள் :
'மாஜி।' நடிகை ஜெயா பச்சனுக்கு
1,000 கோடி ரூபாய் சொத்து

லக்னோ : பாலிவுட் மாஜி நடிகையும், சமாஜ்வாதி மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெயா பச்சனுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

actress Jaya Bachchan,Amitabh Bachchan,Rajya Sabha MP,மாஜி நடிகை ஜெயாபச்சன்,  1000 கோடி ரூபாய் சொத்து, சமாஜ்வாதி, பாலிவுட் நடிகை ஜெயாபச்சன்,  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், ராஜ்யசபா எம்.பி., ராஜ்யசபா தேர்தல் , ரவீந்த கிஷோர் சின்ஹா,
former actress Jaya Bachchan, property worth Rs 1000 crore, Samajwadi, Bollywood actress Jaipachan, Bollywood actor Amitabh Bachchan, Amitabh Bachchan wife Jaya Bachchan,  Rajya Sabha election, Ravindra Kishore Sinha,


பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி, ஜெயா பச்சன், 69. சமாஜ்வாதியை சேர்ந்த ராஜ்யசபா, எம்.பி.,யான இவரது பதவிக் காலம் நிறைவடைவதை அடுத்து, இம்மாதம் நடக்கும்

தேர்தலில் போட்டியிட, கட்சியின் சார்பில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு


இதற்கான வேட்பு மனுத் தாக்கலில், தன் மற்றும் கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தனக்கும், தன் கணவருக்கும், 460 கோடி ரூபாய் மதிப்பிலான, அசையா சொத்துகள் மற்றும், 540 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துஉள்ளார்.

கடந்த, 2012ல், சமாஜ்வாதி சார்பில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட, ஜெயா பச்சன், 152 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், 343 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

Advertisement


பணக்கார எம்.பி.,


பா.ஜ.,வை சேர்ந்த, ராஜ்யசபா, எம்.பி., ரவீந்த கிஷோர் சின்ஹா, 2014ல், தனக்கு, 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது, ஜெயா பச்சன், ராஜ்யசபா உறுப்பினராக மீண்டும் தேர்வாகும் பட்சத்தில், அதிக சொத்துகள் உடைய, எம்.பி.,யாக இவரே இருப்பார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-மார்-201820:34:15 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இந்தம்மா என்னமோ தன்னோட பணத்தை வச்சிருக்குரா மாதிரி சொல்றீங்க. எல்லாம் அமிதாப் பச்சனோட பணம் தானே. எந்த ஆடிட்டர் சொல்லி இப்படி இந்தம்மா கணக்கிலே போட்டாருன்னு கேட்டு சொல்லுங்க. அமிதாப்பச்சன் பெயர் எல்லா ஊழல் பேப்பர்களிலும் வந்த பிறகும், மோசடி தர்பாரின் விளம்பர தூதுவராக காசை அள்ளிக்கொண்டு தானே இருக்கார். மோசடியின் தயவு இந்த கூட்டத்துக்கு உண்டு.

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
14-மார்-201818:55:03 IST Report Abuse

vbs manianமுக்கால்வாசி பார்லிமென்ட் உறுப்பினர்கள் இவரைப்போன்று கோடானு கோடிஸ்வரர்கள் தான். சமீபமாக இவர்களது மாத சம்பளம் 80 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. வாழ்நாள் முழுதும் பென்ஷன். இலவச ரயில் விமான பயணம். இலவச டெலிபோன் கால்கள் எவ்வளவோ. இலவச பெட்ரோல்.மக்கள் சேவை செய்பவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் தேவையா இந்த ஜெயா பச்சன் சபையில் எவ்வளவு தடவை என்ன பேசினார் என்று யாருக்கும் தெரியாது. இரண்டு வேலை சோற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் தவிக்கும் இந்த நாட்டில் இப்படியும் ஓர் அவலம்.

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
14-மார்-201817:01:39 IST Report Abuse

N.Kaliraj இந்தியா வல்லரசுதான்.....இங்கு கேடிகளெல்லாம் சர்வ சாதாரணம்...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-மார்-201816:35:39 IST Report Abuse

Endrum Indianஇப்படி சட்டம் இயற்றப்படவேண்டும். 100 கோடிக்கு மேல் சொத்து உள்ள சொந்தக்காரர்கள் இறந்த பின் அவர்கள் சொத்து அரசு கஜானாவுக்கு சென்றுவிடும், அவர்கள் பெயரில் நதிகள் இணைப்பு முதல் மின்சார வசதிகள் வரை எல்லா infrastructure development செய்யப்படும் என்று.

Rate this:
14-மார்-201819:15:21 IST Report Abuse

குமார்.சுநல்ல யோசனை!...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-மார்-201816:31:11 IST Report Abuse

Endrum Indianஇதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். நேற்று பொறந்த அனுஷ்காவிடம் ரூ. 420 கோடி (+விராட் கோஹ்லி ரூ. 450 கோடி) அப்போ பழம் பெரும் நடிகை ஜெயாவிடம் (நம்ம ஜெயலலிதா கிடையாது) அதாவது உழைத்து சம்பாதித்த ரூ 1 ,055 கோடி அதாவது 1970 l அவர் ஒரு படத்திற்கு ரூ 10 கோடி வாங்கினார்-அப்படித்தானே???????, அவர் 100 படங்களில் நடித்து ரூ 1055 கோடி செய்தார். இப்படி எல்லா சொத்தையும் இவங்க அமுக்கி வச்சி என்ன தான் பண்ணப்போகின்றார்கள், இதை நம்ம வருமான வரித்துறை அப்படியே க்நே என்று கேனையான் மாதிரி பார்த்துக்கொண்டு இருக்கும் அப்படித்தானே. நடித்தது ஒரு 100 படம் இருக்கும் அதில் சேர்ந்த வருமானம் போனால் போகின்றது என்று வைத்துக்கொண்டால் கூட ரூ 10 கோடி இருந்தா அதிகம். நம்ம அமிதாப் தான் "கோன் பனேகா க்ரோர்பதி" முன்னாடி ஐ.பி. கொடுத்ட்க்ட்டு போக ரெடியா இருந்த ஆளாயிற்றே அவர் மனைவியிடம் அப்போ இந்த பணம் எல்லாம் இல்லையா????

Rate this:
balasubramanian - coimbatore,இந்தியா
14-மார்-201816:18:18 IST Report Abuse

balasubramanianமுறையாக வரி கட்டிய வருமானத்தைத்தான் வெளியில் சொல்ல முடியும்.மனிதருக்கு பல வழிகளில் பணம் வந்து குவிந்து விட்டது.வந்த பணத்தை காப்பாற்றி அதை பல மடங்காக பெருக்கிவிட்டார்.

Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
14-மார்-201815:04:42 IST Report Abuse

chakraகுரோர் பனேகாவிற்கு முன் அமிதாப் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் இருந்தார் . இப்போது எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன?

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-மார்-201813:58:39 IST Report Abuse

தமிழ்வேல் வாழ்க உங்கள் தொண்டு..

Rate this:
Divahar - tirunelveli,இந்தியா
14-மார்-201813:07:48 IST Report Abuse

Divaharமக்களுக்கு சேவை செய்ய இவர் மாதிரி ஆட்கள் தான் தேவை?

Rate this:
smoorthy - bangalore,இந்தியா
14-மார்-201812:17:42 IST Report Abuse

smoorthyஇவர்களுக்கு எதற்கு ராஜ்ய சபா MP பதவி என தெரியவில்லை / கோடி கணக்கில் சொத்து இருக்கிறது / இவர்களுக்கு எல்லா வசதியும் இலவசமாக வேறு கொடுக்கிறார்கள் / மேலும் ஓய்வு பெரும் போது பென்ஷன் வேறு / வெக்கமாக உள்ளது / கட்சில எத்தனையோ உண்மையான தொண்டர் இருந்தும் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை / இவர்கள் ராஜ்ய சபா போய் இது வரை என்ன சாதித்தார்கள் ஒன்றும் புரியவில்லை /

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement