ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் சென்னை அணி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் சென்னை அணி

Added : மார் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Chennai,சென்னை

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. இரண்டாவது சுற்று அரையிறுதியில் கோவாவை 3-0 என வீழ்த்தியது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் நான்காவது 'சீசன்' இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. முதல் அணியாக பெங்களூரு, பைனலுக்கு முன்னேறிவிட்டது. சென்னை- கோவா அணிகள் மோதிய இரண்டாவது சுற்று அரையிறுதி இன்று சென்னையில் நடந்தது.

சொந்த மண்ணில் சென்னை வீரர்கள் மிரட்டினர். 26வது நிமிடத்தில் சென்னையின் ஜீஜே முதல் கோல் அடித்தார். அடுத்த சில நிமிடத்தில் (29) தன்பால் கணேஷ், பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க, சென்னை ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால், முதல் பாதியில் சென்னை 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் கோல் அடிக்க முடியாத விரக்தியில் கோவா அணியினர் இருந்தனர். இதனால், அடிக்கடி எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அசத்திய ஜீஜே கடைசி கட்டத்தில் (90) ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.

முடிவில், 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே நடந்த முதல் சுற்று அரையிறுதி கோல் கணக்கையும் சேர்த்து, 4-1 என்ற முன்னிலையுடன், சென்னை அணி பைனலுக்கு ஜோராக முன்னேறியது. வரும் 17ம் தேதி நடக்கும் பைனலில், பெங்களூருவை, அதன் சொந்தமண்ணில் சந்திக்கவுள்ளது.

ஐ.எஸ்.எல்., தொடரில், இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது சென்னை அணி. இதற்கு முன், 2015 தொடரில், கோவாவை வீழ்த்தி கோப்பை வென்றது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X