கமல் கட்சியில் நான்? தமிழிசை அதிர்ச்சி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கமல் கட்சியில் நான்?
தமிழிசை அதிர்ச்சி

திருப்பூர் : ''மக்கள் நீதி மையத்தில், என்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக, 'இ - மெயில்' வந்துள்ளது,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.

Tamilisai Soundararajan,Makkal neethi maiam,TTV Dinakaran, தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் நீதி மய்யம்,தமிழிசை இ - மெயில், தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை ,TTV தினகரன், காவிரி மேலாண்மை வாரியம், குரங்கணி காட்டுத் தீ விபத்து,கமல் கட்சி,kamal party,Tamil Nadu BJP leader Tamilisai , Cauvery Management Board, Kurangani forest fire accident,tamilisai Email,


விமர்சனம்


திருப்பூரில், நேற்று அவர் அளித்த பேட்டி: 'மாற்றத்தை கொடுப்போம்' எனக் கூறும் தினகரன், சிறையில் இருப்பவரின் படத்தை போட்டு, கட்சி துவங்குகிறார். வெற்றிடத்தை நிரப்புவதாகக் கூறி, புதிது புதிதாக பலர் கட்சி துவக்குகின்றனர்.

கமல், நெசவாளர், மீனவர் பிரச்னை பற்றி பேசி வருகிறார். அரசியல் யாரும் செய்யலாம்;

தீர்வை, அரசுகளால் மட்டுமே தர முடியும். கமல், தன் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கிறார்; மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக, என்னை சேர்த்துள்ளதாக, எனக்கு மெயில் வந்துள்ளது. பா.ஜ., மாநில தலைவரையே கட்சியில் சேர்த்துள்ளனர். பொய்யான கட்சியை, அவர் நடத்தி வருகிறார்.

சினிமா துறை பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாதவரா, மாநில பிரச்னைகளுக்கு தீர்வு காணப் போகிறார். ரஜினி,முழுமையாக அரசியலில் இறங்கினால், அவரையும் விமர்சனம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை


சென்னை விமான நிலையத்தில், தமிழிசை அளித்த பேட்டி: குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காட்டிற்குள் மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச் செல்பவர்களை கண்காணிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருக்கும் ஆபத்து ஏற்படாத வகையில், பயிற்சி இருக்க வேண்டும்.

Advertisementகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விஷயத்தில், தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மத்திய அரசு செயல்படும்.

சென்னை-க்கும், மியான்மருக்கும் இடையே, நேரடி விமான சேவை துவங்க, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், சுரேஷ் பிரபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.G.RAMAN - MADURAI,இந்தியா
14-மார்-201821:37:27 IST Report Abuse

N.G.RAMANமக்கள் நீதி மய்யம் கட்சியை பற்றி குறை கூறும் முன் அந்த கட்சி உறுப்பினர்களை எப்படி சேர்க்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். உறுப்பினராக விரும்பவோர் மய்யம் வெப்சைட் சென்று தனது இ மெயில் முகவரியை பதிய வேண்டும். அதன்பிறகு அவரது இ மெயிலுக்கு உறுப்பினர் எண் அனுப்பி வைக்கப்படும். இதுதான் நடைமுறை.

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201820:43:19 IST Report Abuse

Rahimதிரு ப்ராஜான் அவர்களே,ஆதாரம் ஆதாரம் என்று கேட்கும் நீங்கள் மறுத்து அதற்க்கான ஆதாரத்தை கொடுங்களேன் ? தமிழர் நீதி சொன்னது அனைத்திற்கும் எந்த நூல் ஆதாரம் என அவர் விளக்கி இருக்கிறார் , மிக முக்கியமாக மார்புக்கு வரி போட்டது உண்மை தானே சாரட் வண்டியில் அதிகார வர்க்கம் போனால் அருகில் ஓடிக்கொண்டே பிற்படுத்த ஆண்கள் வரவேண்டி இருந்ததே , பொது குளத்தில் தண்ணீர் எடுப்பது தடை செய்யப்பட்டது உண்மை தானே , விமர்சனத்திற்கு ஆதாரம் கேட்பதை விட உங்களிடம் இருக்கும் மறுப்பு ஆதாரத்தை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவியுங்கள் ,அதை விடுத்து வழக்கம் போல தனி நபர் தாக்குதலை தொடுக்காமல் நிறுத்துங்கள்.

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201820:34:31 IST Report Abuse

Rahimஏண்டா ஸ்ரீ ராமுலு உன்னைப்போல இல்லடா நான் ,பல நாட்களுக்கு முன்பே எழுதினேன் தமிழிசைக்கு எதிரா தீயா வேலை செய்யும் பாஜக கும்பலை பற்றி ,நீ என்னடா நா ஆடு ஓநாய் கதை சொல்லிட்டு இருக்க , ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகுந்து கலவரம் பண்ணினது நாங்க இல்லடா போலி முகமூடியை போட்டுகொண்டு கோழை போல உள்ளே புகுந்து கலவரம் வர வைத்தது உன் பண்டார கட்சியின் துணை அமைப்பான ABVP ரவுடிகள் , சென்னை பாஜக பிரமுகர் ராஜியின் பைக்கில் ஒசாமா படத்தை ஒட்டி குல்லா போட்டுகொண்டு முகத்தை மூடி ஸ்கூட்டரை ஒட்டி குழப்படி செய்ததும் நீங்க தாண்டா , நானும் நூறு வாட்டி கேட்டு விட்டேன் அந்த ஸ்கூட்டர் விவகாரம் என்ன ஆச்சு ? இது வரை ஒரு பண்டாரமும் பதில் சொல்ல மாட்டேங்குறான் ,இவ்ளோ ரோஷமா பேசுறியே இப்போ நீயாச்சும் சொல்லு என்ன ஆச்சு ????????????

Rate this:
Muthu - Bangalore,இந்தியா
16-மார்-201815:10:09 IST Report Abuse

Muthuபிஜேபி பண்டாரம் கட்சியென்றால் .?? அப்போ முஸ்லீம் லீக் தீவிரவாத கட்சியா..?? ABVP ரௌடிகள் என்றால், அவ்வப்பொழுது இந்து கட்சி பிரமுகர்களை கொன்று குவிக்கும் கட்சிகள் எல்லாம் உத்தம புத்திரர்களா..??...

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X