ஜனாதிபதி, பிரதமருக்கு தனி விமான வசதி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி, பிரதமருக்கு
தனி விமான வசதி

புதுடில்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்துவதற்காக, இரு தனி விமானங்கள், சிறப்பு வசதிகளுடன் தயாராகி வருகின்றன. 2020ல், இது பயன்பாட்டுக்கு வரும்.

Boeing 747,President,Prime Minister,ஜனாதிபதி, துணை ஜனாதிபதி,பிரதமர்,  வி.வி.ஐ.பி.க்கள், தனி விமானங்கள், ஏர் - இந்தியா,போயிங் - 747,  ஏவுகணைகள் தாக்குதலை சமாளிக்கும் திறன், போயிங் நிறுவனம், அவசர கால மருத்துவ சிகிச்சை வசதி , 
 Vice President,  VVIPs, Separate planes, Air India,  Boeing company, emergency medical care facility,The ability to deal with missiles attacks,


ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் பயணத்துக்காக, தற்போது, 'ஏர் - இந்தியா'வின், 'போயிங் - 747' ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.வி.வி.ஐ.பி.,க்களுக்கு என, தனியாக விமானம் வாங்க, அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், போயிங் நிறுவனத்திடம் இருந்து, 68 விமானங்களை வாங்க, ஏர் - இந்தியா நிறுவனம், 2006ல் ஒப்பந்தம் செய்தது. அதில், கடைசி மூன்று விமானங்கள், சமீபத்தில் வந்துசேர்ந்தன. இதில், போயிங் 747 - 300 ரக விமானங்கள் இரு, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட உள்ளன.

இந்த இரு விமானங்களை, ஏர் - இந்தியாவிடம் இருந்து, மத்திய அரசு வாங்க உள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இதற்காக, 4,469 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த இரு விமானங்களில், வி.ஐ.பி.,க்களுக்கு என, தனி அறை, நிருபர்கள் சந்திப்பு நடத்துவதற்கான வசதி, அவசர கால மருத்துவ சிகிச்சை வசதி உட்பட, பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.

மேலும், ஏவுகணைகள் தாக்குதலை சமாளிக்கும் திறனுடன் கூடியதாக, இந்த இரு விமானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.அதற்காக, ஜூன் மாதம்,

Advertisement

அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்துக்கு, இவை அனுப்பி வைக்கப்பட உள்ளன. 2020ல், இவை பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 44 விமானிகள் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், குறைந்தபட்சம், நான்கு பேர், எப்போதும் டில்லியில் தயார் நிலையில் இருப்பர். அதே போல், விமான பராமரிப்புக்கென, தனி குழு அமைக்கப்பட உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raajan - Mumbai,இந்தியா
14-மார்-201816:28:33 IST Report Abuse

Raajanஇருக்கிற இந்திய மக்களுக்கு அந்த வரி இந்த வரி என்று போட்டு ஓட்டாண்டி ஆக்கிவிட்டு, நீங்கள் தனி விமானத்தில் சுத்துங்க. நாடும் நாட்டுமக்களும் நல்ல வாழ்த்துவாங்க. இந்திய விவசாயிகள் செருப்பு வாங்க கூட வழி இல்லாம இருக்கிறான், நீங்க கிடைக்கிற வரியில் அத்தனை அரசியல் வாதிகளும் கூவத்தூரிலிருந்து உலகின் விலை உயர்ந்த விடுதி எங்க இருக்கிறது என்று தேடிப்பார்த்து போய் தங்குங்க. உங்களுக்கு லட்சக்கணக்குல சம்பளம் ஓய்வூதியம் எல்லாம் கிடைக்கிறது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-மார்-201816:10:39 IST Report Abuse

Endrum Indianஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் ???? "போன்ற" என்னும் இந்திய நாட்டின் சட்டம் இந்திய நாட்டை நிர்மூலமாகிவிட்டது. தயவு செய்து Be Very Categorical and Specific. ஓட்டை ஒன்றே நமது சட்டம் போல இருக்கின்றது. பிற்காலத்தில் போன்றவர்கள்-கவர்னர்கள், மந்திரிகள், எம்.பிக்கள். முதல்வர்கள், எம்.எல்.ஏக்கள்.......என்று கொஞ்சம் கொஞ்சமாக நீண்டுகொண்டே போகும்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-மார்-201815:05:17 IST Report Abuse

Nallavan Nallavanஇந்தியா ஒரு ஜனநாயக நாடா ? மக்களாட்சியா நடக்கிறது இங்கே ??

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-மார்-201819:30:45 IST Report Abuse

தமிழ்வேல் இதிலென்ன சந்தேகம் ஜீஜி.. அதுவும் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு ஆச்சே.. பொருளாதார வளர்ச்சி உள்ள நமது நாட்டிற்கு இந்த விமானம் தேவைதான்.. ஆனால், வெளிநாட்டில் யாருக்கும் தெரியாத மொழியில் "ஏர் இந்தியா" என்று ஹிந்தியில் எழுதப்பட்ட விமானத்தில் பயணிக்காமல், நமது கொடியுடன் "இந்தியா" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நல்லது....

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X