களத்திற்கு வர மறுக்கும் தம்பிதுரை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
களத்திற்கு வர மறுக்கும்
தம்பிதுரை

அமளி, ஆர்ப்பாட்டம் என, எதிலும் பங்கேற்காமல், தினந்தோறும் ஊடகங்களிடம், 'பார்லிமென்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை கூறுவது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 Deputy Speaker Thambidurai,AIADMK MPs, Parliamentary,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ,அ.தி.மு.க எம்.பிக்கள், பார்லிமென்ட், பட்ஜெட் கூட்டத்தொடர், விஜய் சவுக் புல்வெளி, லோக்சபா, ராஜ்யசபா, ஒத்திவைப்பு, A.D.M.K,Thambidurai,அ.தி.மு.க, தம்பிதுரை,Lok Sabha Deputy Speaker Thambidurai,  Budget Session, Vijay Chowk Lawn, Lok Sabha, Rajya Sabha, adjournmentபட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு துவங்கிய தினத்திலிருந்து, தினமும், அமளியால், லோக்சபாவும், ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தனை காலமும் அமைதியாக இருந்த, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் தான் தற்போது பலம் காட்டுகின்றனர்.

காலை, 10:00 மணிக்கு, காந்தி சிலை; 11:00 மணிக்கு சபையின் உள்பகுதி; 12:00 மணிக்கு பார்லிமென்டிற்கு வெளியே உள்ள, விஜய் சவுக் புல்வெளி என, மாறி மாறி இடம் பெயர்வது, .தி.மு.க., - எம்.பி.,க்களின் அன்றாட அலுவலாக மாறி விட்டது.ஆனால், டில்லியில், அ.தி.மு.க., - எம்.பி.,க் களை வழிநடத்துபவராக கூறப்படும், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரையின் நடவடிக்கைகள், புரியாத புதிராக உள்ளன.

காந்தி சிலை முன் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் வருவதில்லை; சபைக்குள் அமளி நடக்கும் போது, அதிலும் பங்கேற்பது இல்லை. குறைந்தபட்சம் இருக்கையை விட்டு எழுந்து நிற்பதைக் கூட, காண முடியவில்லை.ஆனால், 12:00 மணிக்கு, சபை ஒத்தி வைக்கப்பட்டதும், சக, எம்.பி.,க்களுடன்விஜய் சவுக்கில் உள்ள, 'டிவி' கேமராக்கள் முன், தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

இதுவரை, ஏழு நாட்கள் பேட்டி அளித்துள்ளார். இவற்றில், பிரதமரை சந்திப்பது குறித்தோ, அடுத்தகட்ட அணுகுமுறை குறித்தோ, எதுவும் தெளிவுபடுத்தவில்லை. 'சபையை நடத்த விட மாட்டோம்' என்பதையே, திரும்பத் திரும்ப கூறுகிறார்.

முதல் நாள் ஆர்ப்பாட்டமே, தம்பிதுரை தலைமையில் தான் எனக் கூறப்பட்டும், அவர் வரவில்லை. விசாரித்த போது, 'துணை சபாநாயகர் என்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர், ஆர்ப்பாட்டம் செய்வது சரியாக இருக்காது என்பதால், வரவில்லை' என, கூறப்பட்டது.'சபையை நடத்தும் பொறுப்பில் இருந்து கொண்டே, 'சபையை நடத்த விட மாட்டோம்' என, பேட்டியளிக்க மட்டும் துணிச்சல் உள்ளது.

'அதே துணிச்சல், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கும், அமளி செய்வதற்கும் மட்டும் அவருக்கு இல்லையா' என, சக, எம்.பி.,க்கள் கூறுகின்றனர்.பல்வேறு பிரச்னைகளுக்காக, பல கட்சிகளும் ஏற்படுத்தும் நெருக்கடியை, தானும் பயன்படுத்திக் கொள்ளவே, அ.தி.மு.க., தினந்தோறும் ஆர்ப்பாட்டமும், அமளியும் செய்கிறது.

Advertisement

ஆனால் அதையும், தம்பிதுரை, தனக்காக பயன் படுத்துவதாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குமுறுவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்.பி.,க்கள் வாயில் திருப்பதி லட்டு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, ஏழாவது நாளாக நேற்றும், இரு சபைகளின் அலுவல்களும் பாதிக்கப்பட்டன. காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, திருப்பதி லட்டு பிரசாதத்தை, ஆந்திர, எம்.பி.,க்கள் தங்களுக்குள் வினியோகித்தனர். அருகிலேயே கோஷங்கள் போட்ட, அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் வாய்களிலும், லட்டை ஊட்டிவிட்டனர். நட்போடு ஊட்டிய லட்டை சாப்பிட்டதும், உற்சாகத்தில், மீண்டும் கோஷங்களை ஓங்கிப் போட்டு விட்டு, ஓரிரு நிமிடங்களில் கலைந்து சென்றனர்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா
14-மார்-201818:55:45 IST Report Abuse

S. RAGHURAMANதுணை சபாநாயகர் சபையை முடக்குவோம் நடத்தவிடமாட்டோம் என்று மீடியாக்களிடம் முழங்குவது கேவலம். இவருக்கு வோட்டு போட்டவர்களுக்கு செய்யும் அநீதி.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-மார்-201816:42:02 IST Report Abuse

Endrum Indianஅசிங்க தி.மு.க. எம்பிக்கள் என்றால் இப்படித்தானிருப்பர், சேறு என்றாவது சந்தனம் போல நறுமணம் கொடுக்க முடியுமா????

Rate this:
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-மார்-201812:22:24 IST Report Abuse

Muthuஜெயலலிதா சிங்கமாக இருக்கவேண்டும் என்பதற்க்காக இந்த சிறு நரிகளை வளர்த்துவிட்டு போய்விட்டார்...இன்று மக்கள்தான் அவதிப்படுகிறார்கள் ..அதிலும் இந்த தம்பித்துரை நோகாமல் நொங்கு குடிப்பவர்..

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X